மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு… மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையுடன் திறன் பயிற்சி. இதோ விண்ணப்பிக்கும் முறை!
ஆவண சரிபார்ப்பிற்காக வரும்போது எந்தவித பயிற்சிக்கட்டணமும் அல்லது வேறு எந்த படிகளோ வழங்கப்படமாட்டது - சென்னை ஆதிதிராவிடர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு பொது அறிவு, தன்னறிவு சோதனை, கணினி அடிப்படைப் பயன்பாடு, சுருக்கெழுத்து போன்ற திறன் பயிற்சிகள் உதவித்தொகையுடன் வழங்கப்படவுள்ளது. எனவே ஆர்வமுள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.
இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக தேசிய வாழ்வாதார சேவை மையம் சென்னையில் செயல்பட்டுவருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பழங்குடியின மற்றும் ஆதி திராவிட மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் விதமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு 27 வது கட்ட உதவித்தொகையுடன் கூடிய இலவச சிறப்புப்பயிற்சி திட்டம் வருகின்ற டிசம்பர் முதல் தேதியிலிருந்து அடுத்த 11 மாத காலக்கட்டத்திற்கு நடைபெறவுள்ளது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்கும் முறை:
அரசால் வழங்கப்படவுள்ள திறன்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் 12 ஆம் தேர்ச்சி மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதிக்கொண்டிருக்கலாம்.
மேற்கண்ட தகுதி இருக்கும் பட்சத்தில், ஆர்வமுள்ள எஸ்சி மற்றும் எஸ்டி விண்ணப்பதார்கள் வேலைவாய்ப்பு அலுவலத்தின் மூலம் இப்பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். ஆனால் இதற்கு 18 வயது நிறைவு பெற்றவர்களாகவும் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பது அவசியம்.
இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 30 ஆம் தேதி வரை சென்யைில் உள்ள மையத்தில் இலவச விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதனையடுத்து விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அதனுடன் கல்வித் தகுதி, மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்களை (ஜெராக்ஸ்) வைத்து அஞ்சல் அல்லது கொரியர் வாயிலாக அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம்,
3-வது தளம், வேலைவாய்ப்பு அலுவலகம்,
56 சாந்தோம் பிரதான சாலை,
சென்னை .
குறிப்பாக தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஆவண சரிபார்ப்பிற்காக வரும் போது எந்தவித பயிற்சிக்கட்டணமும் அல்லது வேறு எந்த படிகளோ வழங்கப்படமாட்டது என சென்னை ஆதிதிராவிடர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை மண்டல வேலைவாய்ப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் தகுதிவாய்ந்தவர்களுக்கு பொது ஆங்கிலம், பொது அறிவு மற்றும் தன்னறிவு சோதனை, கணினி அடிப்படை, கணினி செயல்திறன், சுருக்கெழுத்து, தட்டச்சு ஆகியவற்றில் தங்களது திறமைகளை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் எனவும் பயிற்சிக் காலத்தில் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை மற்றும் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.