Bhartiya Shiksha Board: பாபா ராம்தேவின் பாரதிய சிக்ஷா வாரியத்துக்கு தேசிய கல்வி வாரிய அங்கீகாரம்: ஏஐசிடிஇ அறிவிப்பு
பாபா ராம்தேவின் பாரதிய சிக்ஷா வாரியத்துக்கு அகில இந்திய கல்வி வாரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளதாக ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
![Bhartiya Shiksha Board: பாபா ராம்தேவின் பாரதிய சிக்ஷா வாரியத்துக்கு தேசிய கல்வி வாரிய அங்கீகாரம்: ஏஐசிடிஇ அறிவிப்பு Ramdev's Bhartiya Shiksha Board A Pan India Education Board Now Bhartiya Shiksha Board: பாபா ராம்தேவின் பாரதிய சிக்ஷா வாரியத்துக்கு தேசிய கல்வி வாரிய அங்கீகாரம்: ஏஐசிடிஇ அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/22/4096c36a6493fd1c99f27ee7da21e29f1695370930438332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாபா ராம்தேவின் பாரதிய சிக்ஷா வாரியத்துக்கு அகில இந்திய கல்வி வாரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளதாக ஏஐசிடிஇ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கும் ஏஐசிடிஇ திட்ட மற்றும் கல்வி ஆலோசகர் மம்தா அகர்வால் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2019ஆம் ஆண்டு பாரதிய சிக்ஷா வாரியம் (Bhartiya Shiksha Board - BSB) உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் உயர் கல்வித் துறையின் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு தற்போது நாட்டின் பிற தேசிய கல்வி வாரியங்களைப் போன்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கல்வி வாரியங்களுக்கு இணையான அந்தஸ்தை இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் (Association of Indian Universities AIU), பாரதிய சிக்ஷா வாரியத்துக்கு வழங்கி உள்ளது. 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தவும் இந்தியாவுக்கு உள்ளே வழக்கமான பள்ளி வாரியமாகச் செயல்படவும் இந்திய பல்கலைக்கழகங்களின் சங்கம் அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம், பாரதிய சிக்ஷா வாரியத்துக்கு அகில இந்திய கல்வி வாரியமாக (Pan India School Education Board) அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
பாரதிய சிக்ஷா வாரியம்
பாரதிய சிக்ஷா வாரிய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று, இந்திய அறிவியல் சார் அமைப்புகளை மீண்டும் நிறுவும் நோக்கத்துடன் இந்த வாரியம் அறிமுகப்படுத்தப்பட்டது. 'மெக்காலேயின் நச்சு மரபுக்கு' (Macaulay's toxic legacy) எதிராக பாரதிய சிக்ஷா வாரியம் தோற்றுவிக்கப்பட்டது.
பாரதிய ஞானப் பரம்பரை மற்றும் குருகுல அமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய நமது உள்நாட்டு கல்வி மற்றும் அறிவு அமைப்புகளை மெக்காலேயின் நச்சு மரபு, வேண்டுமென்றே கலைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. "நாட்டில் உள்ள அறிவு அமைப்பு, பின்னர் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் காலனித்துவ தேசத்தின் அடிமை மனநிலையுடன் மாற்றப்பட்டது" என்றும் பாரதிய சிக்ஷா வாரியம் தெரிவித்துள்ளது.
நிறுவனர்கள் யார் யார்?
பாரதிய சிக்ஷா வாரியத்தின் தலைவராக ராம்தேவ் உள்ளார். அதேபோல எஃப்எம்சிஜி நிறுவனமான பதஞ்சலியின் இணை நிறுவனரான ஆச்சார்ய பால கிருஷ்ணாவும் தலைமைப் பொறுப்பில் உள்ளார். கல்வி வாரியத்தின் உறுப்பினர்களாக ஆன்மிகத் தலைவர் மொராரி பாபு, ஸ்வாமி கோவிந்த் கிரி ஜி, ஸ்ரீனிவாச வரகேதி, மருத்துவர் நாகேந்திர பிரசாத் சிங், மருத்துவர் பூனம் சூரி மற்றும் கிரிதர் மாளவியா சதஸ்யா ஆகியோர் உள்ளனர்.
இந்த நிலையில், பாபா ராம்தேவின் பாரதிய சிக்ஷா வாரியத்துக்கு அகில இந்திய கல்வி வாரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)