Quarterly Holidays : மாணவர்களுக்கு ஸ்வீட் நியூஸ்.. காலாண்டு தேர்வு விடுமுறை மீண்டும் நீட்டிப்பு.. எதுவரை?
1 முதல் 12 வரை பள்ளி மாணவர்களை மீண்டும் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
1 முதல் 12 வரை பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9-ஆம் தேதி வரையில் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடுமுறை 12-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 5ஆம் தேதி வரையிலும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 9-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தற்போது 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது என்பதை பள்ளிக்கல்வித்துறை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த கல்வியாண்டுக்கான காலாண்டு விடுமுறை என்பது, 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு அக்டோபர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து 9ஆம் தேதி வரை விடுமுறை என அறிவித்திருந்தது. அதேபோல், 6ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு, ஏற்கனவே அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து 5ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளை பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10 முதல் 12 வரை நடப்பதால் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அக்டோபர் 6 முதல் 8 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி என அறிவிக்கப்பட்டு அக்டோபர் 9 வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரையாண்டு தேர்வு எப்போது..?
1 முதல் 10ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு டிசம்பர் 19ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் இந்த கல்வியாண்டிற்கான திட்டமிடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் 11 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 16ஆம் தேதி முதல் நடைபெறும் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் இந்த கல்வியாண்டிற்கான திட்டமிடலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுக்கான விடுமுறை நாட்கள் என்றும் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் மகிழ்ச்சி
பள்ளிக்கல்வித்துறையின் இந்த திடீர் அறிவிப்பால் அரசு பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் இப்பொது இருந்தே அரையாண்டு குறித்த அறிவுரைகள் பள்ளி சார்பிலும், பெற்றோர்கள் சார்பிலும் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.