puducherry school holiday : புதுச்சேரியில் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Puducherry school holiday: புதுச்சேரியில் துணை தாசில்தார் பணிக்கு போட்டித் தேர்வு நடைபெறுவதை ஒட்டி ஆகஸ்ட் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் துணை தாசில்தார் பணிக்கு போட்டித் தேர்வு நடைபெறுவதை ஒட்டி ஆகஸ்ட் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பில்.,
புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் உள்ள அரசு/தனியார் பள்ளிகளில் துணை தாசில்தார் பதவிக்கு புதுச்சேரி அரசால் சனிக்கிழமை, 30.08.2025 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த அரசு போட்டித் தேர்வைக் கருத்தில் கொண்டு, முன்னதாக 30.08.2025 (சனிக்கிழமை) அன்று திட்டமிடப்பட்டிருந்த ஈடுசெய்யும் வேலை நாள் இதனால் ஒத்திவைக்கப்படுகிறது. இழப்பீட்டு வேலை நாள் இப்போது 29.11.2025 (சனிக்கிழமை) அன்று அனுசரிக்கப்படும். இந்த நாளில், புதன்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.
மேலும், குறிப்பு 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, முதலில் 30.08.2025 அன்று காலை திட்டமிடப்பட்டிருந்த, I முதல் XII வகுப்புகளுக்கான காலமுறை தேர்வு-Il, இப்போது 29.08.2025 அன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் அமர்வில் மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை நடத்தப்படும். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது .
துணை தாசில்தார் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு
புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது. துணை தாசில்தார் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 101 தேர்வு மையங்களில் வருகிற 31-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பதவிகளுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் டவுன்லோடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்யலாம்.இதுதொடர்பாக ஏதேனும் விவரம் அல்லது உதவி தேவைப்பட்டால் தேர்வர்கள் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தலைமை செயலகம் தேர்வு பிரிவு அரசு சார்பு செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.





















