Pharm D Nursing Admission: ஃபார்ம் டி, நர்சிங் படிப்புகளுக்கு ஜூலை 26 வரை விண்ணப்பிக்கலாம்; எப்படி? முழு விவரம்
தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் ஃபார்ம் டி, நர்சிங் பட்டயப் படிப்புகளில் சேர ஜூலை 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் ஃபார்ம் டி, நர்சிங் பட்டயப் படிப்புகளில் சேர ஜூலை 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் https://reg23.tnmedicalonline.co.in/pharmd//MyCourse.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்து செவிலியர் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளில் உள்ள செவிலியர் பட்டயப் படிப்பிற்கான இடங்களில் சேருவதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.300 ஆகும். அதேபோல ஃபார்ம் டி படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தினை அணுக முடியாத விண்ணப்பதாரர்கள் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி / தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி / அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி, பெருந்துறை / சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிக்கு நேரடியாக சென்று அங்குள்ள இணையதள உதவி மையத்தை அணுகி
இணையதள விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யலாம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதாவது பூர்விகமாகக் கொண்டவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் தமிழ்நாட்டின் தகுதிவாய்ந்த வருவாய் ஆணையத்தால் வழங்கப்பட்ட பிறப்பிட சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். இடஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டின் தகுதிவாய்ந்த வருவாய் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சாதிச் சான்றிதழை சமாப்பிக்க வேண்டும் மற்றும் பெற்றோரில் எவரேனும் ஒருவரின் தமிழ்நாட்டில் பெறப்பட்ட சாதிச் சான்றிதழைம் சமாப்பிக்க வேண்டும்.
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் படித்த பிற மாநில விண்ணப்பதாரர்கள் பொதுப் பிரிவு விண்ணப்பதாரராக கருதப்படுவார்கள்.
பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே செவிலியர் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். செவிலியர் பட்டயப்படிப்பிற்கு சுயமாக தங்களை மூன்றாம் பாலினமாகக் கண்டுகொண்ட விண்ணப்பதாரர்கள் தங்களை பெண் என்று அடையாளப்படுத்தும் விதமாக தமிழ்நாடு மூன்றாம் பாலின நலவாரியத்தால் வழங்கப்பட்ட சான்றிதழை இனணயதள விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்து செவிலியர் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
விண்ணப்பதாரர்கள் 31 டிசம்பர் 2023 அன்று 17 வயது நிறைவு செய்தவராக இருத்தல் வேண்டும். அதேபோல 35 வயது மிகாதவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் முதல் மொழியாக “தமிழ்” படித்திருக்க வேண்டும்
65% இடங்கள் பின்வரும் பாடங்களில் உள்ளவர்களால் நிரப்பப்படும்.
1. இயற்பியல், வேதியியல், உயிரியல் வேறு ஏதேனும் பாடத்துடன்.
2. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்.
25% இடங்கள் பின்வரும் பாடங்களில் உள்ளவர்களால் நிரப்பப்படும்.
1. தொழிற்கல்வி நர்சிங்.
2. தொழிற்கல்வி பாடமாக உள்ள தொழில் சார்ந்த அறிவியல்.
மேலே குறிப்பிடப்படாத பாடத்தில் உள்ள விண்ணப்பதாரர்களால் 10% இடங்கள் நிரப்பப்படும்.
நர்சிங் பட்டயப் படிப்பில் சேர்வதற்கான முழுமையான தகவல்கள் அடங்கிய கையேட்டை https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N23074029.pdf என்ற இணைப்பில் காணலாம்.
ஃபார்ம் டி படிப்பில் சேர்வதற்கான முழுமையான தகவல்கள் அடங்கிய கையேட்டை https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N23074028.pdf என்ற இணைப்பில் காணலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://tnhealth.tn.gov.in/ என்ற மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக இணையதளத்தைக் காணவும்.