School Holidays: ஓணம் டூ துர்கா பூஜை- செப்டம்பரில் எத்தனை நாள் லீவு? பள்ளி மாணவர்கள் குஷி!
School Holidays In September: அறுவடைத் திருவிழாவான ஓணத்தில் தொடங்கி, ஆன்மிக விழாவான துர்கா பூஜை வரை, பள்ளிகளுக்கு என்னென்ன நாட்களில் விடுமுறை அளிக்கப்பட உள்ளன? காணலாம்.

செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் பல்வேறு கலாச்சார, மதம் சார்ந்த, பிராந்திய விழாக்கள் நடைபெற உள்ளன. இந்த தினங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட உள்ளது. அறுவடைத் திருவிழாவான ஓணத்தில் தொடங்கி, ஆன்மிக விழாவான துர்கா பூஜை வரை, பள்ளிகளுக்கு என்னென்ன நாட்களில் விடுமுறை அளிக்கப்பட உள்ளன? காணலாம்.
செப்டம்பர் 4, 5- ஓணம்
அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகை, கேரள மாநிலத்தின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
செப்டம்பர் 5- மிலாடி நபி (முகமது நபியின் பிறந்த நாள்) & ஆசிரியர் தினம்
அதேபோல செப். 5ஆம் தேதி மிலாடி நபி, இஸ்லாமிய சமூகத்தினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே தினத்தில் ஆசிரியர் தினமும் வருவதால், தேசிய விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 30- துர்கா பூஜை
இந்த நிகழ்வு வட மாநிலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகைக்கு தமிழ்நாட்டில் உள்ள சில சிபிஎஸ்இ பள்ளிகளில் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
பிற மாநிலங்களில் எப்போது விடுமுறை?
செப்டம்பர் 12: ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள பள்ளிகள் ஈத் பண்டிகைக்குப் பிறகு பாரம்பரிய வெள்ளிக்கிழமைக்கு மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 22: ராஜஸ்தானில் நவரத்ன ஸ்தாபன நிகழ்வு கடைப்பிடிக்கப்படும் நிலையில், அன்று அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
செப்டம்பர் 23: ஜம்மு-காஷ்மீர் மகாராஜா ஹரி சிங்கின் பிறந்தநாளைக் கொண்டாடுவதால் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
செப்டம்பர் 29- 30: மேற்கு வங்கம், அசாம், திரிபுரா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்கள் துர்கா பூஜையைக் கொண்டாடுகின்றன. அங்குள்ள மாநிலங்களில் மகா சப்தமி மற்றும் மகா அஷ்டமிக்கு பள்ளிகள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.























