மேலும் அறிய

பழைய ஓய்வூதிய திட்டம்; அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்த ஜாக்டோ ஜியோ- காலவரையற்ற வேலைநிறுத்த எச்சரிக்கை!

அடையாள வேளை நிறுத்த போராட்டத்திற்குப் பின்னரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அக்டோபர் 16 கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டமும் நவம்பர் 18 ஒரு நாள் அடையாள வேளை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக ஜாக்டா ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடையாள வேளை நிறுத்த போராட்டத்திற்குப் பின்னரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை விடுத்துள்ளது.

பழைய ஓய்வூதியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தொடர்பான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை சூளைமேட்டில் நடைபெற்றது.‌

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், கடந்த ஆட்சியின்போது ஜாக்டோ ஜியோ பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல கட்ட போராட்டங்களை கண்டது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் எங்களை சந்தித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆட்சிக்கு வந்தது நிறைவேற்றிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

அதனை நம்பி நாங்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளித்தோம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகும் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற்ற வாழ்வாதார மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், உங்களுக்கு வழங்கிய கோரிக்கையை மறக்கவில்லை. நிதிநிலை சரியான உடன் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதியும் அளித்தார். இருந்து கடந்த நாலரை ஆண்டாக எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

ஆசிரியர்களிடையே ஏமாற்றம்

இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் விடுப்புத் தொகை மட்டும் வழங்குவதாக அறிவித்தது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு அமைப்பதாக முதல்வர் தெரிவித்தார். அந்த குழு செப்டம்பர் 30ஆம் தேதிக்கு உள்ளாக குழுவின் அறிக்கையைப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவதாக தெரிவித்தார். ஆனால் அவ்வாறு செய்யாமல் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்து, கால அவகாசம் அளித்திருப்பது அரசு ஊழியர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதன் காரணமாக எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்தந்த வட்டார தலைமை அலுவலகம் முன்பாக கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

நவம்பர் 18 ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம்

அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் கல்லூரிகள் அரசு அலுவலகம் என ஜாக்டோ ஜியோ பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். நவம்பர் 18 ஆம் தேதி 5 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இதற்குப் பின்னரும் அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில் காலவரையற்ற வேலை நிறுத்தப்  போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்று தெரிவித்தார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
BJP on TVK Vijay: விஜய்க்கு தங்கம் விலை தெரியுமா? டிவியை உடைத்தவர் இலவசங்கள் வாக்குறுதி தருவதேன்?- பொளந்த பாஜக!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
ABP Premium

வீடியோ

கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold and silver rate today : திடீரென ரூ.10,000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஷாக்- ஒரு சவரன் எவ்வளவு.?
திடீரென ரூ.10,000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு இன்று ஷாக்- ஒரு சவரன் எவ்வளவு.?
TN Roundup: கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை, சிஎம் ஸ்டாலினுக்கு கடிதம், செந்தில் பாலாஜி ட்வீட் -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை, சிஎம் ஸ்டாலினுக்கு கடிதம், செந்தில் பாலாஜி ட்வீட் -தமிழகத்தில் இதுவரை
Cylinder Issue Hotels Closed: என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
என்னது, இன்னைல இருந்து ஹோட்டல்கள் இயங்காதா.?! சிலிண்டர் தட்டுப்பாடால் உரிமையாளர்கள் அதிரடி.!
Trump Furious Warning: “மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
“மரணம், நெருப்பு, ஆக்ரோஷம்.! 20 மடங்கு கடுமையா தாக்குவோம்“; ஈரானுக்கு ட்ரம்ப் பயங்கர எச்சரிக்கை
Senthil Balaji: விஜயை விடுங்க..! சைலண்டா செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ - டீம் போட்டு ஆலோசனை
Senthil Balaji: விஜயை விடுங்க..! சைலண்டா செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச் போடும் சிபிஐ - டீம் போட்டு ஆலோசனை
TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை
TVK Vijay: விஜய்க்கு லீவு கொடுத்த சிபிஐ..! சாஃப்ட் டீலிங்கிற்கு ஒகே சொன்ன தவெக? டெல்லிக்கு முக்கிய கோரிக்கை
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
Gas Cylinder: அடுத்த ஆப்பு..! கேஸ் சிலிண்டர் புக் செய்ய புதிய கட்டுப்பாடுகள், விதிகள் என்ன? மத்திய அரசு அறிவிப்பு
சென்னை மக்களுக்கு நிம்மதி.! பெருங்குடி, SRP டூல்ஸ் சந்திப்பில் ரூ.114 கோடியில் புதிய மேம்பாலம்- எப்போ வருது.?
சென்னை மக்களுக்கு நிம்மதி.! பெருங்குடி, SRP டூல்ஸ் சந்திப்பில் ரூ.114 கோடியில் புதிய மேம்பாலம்- எப்போ வருது.?
Embed widget