மேலும் அறிய

NMMS Scholarship: என்.எம்.எம்.எஸ். உதவித்தொகை தேர்வுக்கு ஜன.9 முதல் விண்ணப்பப் பதிவேற்றம்; என்னென்ன விதிகள்?

தேசிய வருவாய்‌ வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ தொகைத்‌ திட்டத்‌ தேர்வுக்கு, பள்ளி மாணவர்களின்‌ விவரங்களை ஜனவரி 9 முதல் ஆன்லைனில்‌ பதிவேற்றம்‌ செய்யலாம். 

தேசிய வருவாய்‌ வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ தொகைத்‌ திட்டத்‌ தேர்வுக்கு, பள்ளி மாணவர்களின்‌ விவரங்களை ஜனவரி 9 முதல் ஆன்லைனில்‌ பதிவேற்றம்‌ செய்யலாம். 

இதுகுறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளதாவது:

என்.எம்.எம்.எஸ். உதவித்தொகை:

2022- 2023ஆம்‌ ஆண்டிற்கான தேசிய வருவாய்‌ வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ தொகைத்‌ திட்டத்‌ தேர்வு 25.02.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ எட்டாம்‌ வகுப்பு பயிலும்‌ பள்ளி மாணவர்கள்‌ இணையதளம்‌ மூலமாக விண்ணப்பப்‌ படிவங்களை 26.12.2022 முதல்‌ 20.01.2023 வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட தோ்விற்கு விண்ணப்பித்த எட்டாம்‌ வகுப்பு பள்ளி மாணவர்களின்‌ விவரங்களை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள்‌ https://dge1.tn.gov.in எனும் முகவரி மூலமாக 09.01.2023 அன்று பிற்பகல்‌ 12.00 முதல்‌ 25.01.2023 மாலை 06.00 மணி வரை பதிவேற்றம்‌ செய்யலாம்.

பதிவேற்றம்:

கடந்த ஆண்டைப்‌ போலவே இந்த வருடமும்‌ எமிஸ்‌ அடிப்படையில்‌ மாணவர்களின்‌ பதிவு நடைபெறவுள்ளது. எனவே, பள்ளிகளுக்கான பதிவு எண், பாஸ்வேர்டைப் பயன்படுத்தி மாணவர்களின்‌ எமிஸ் எண்ணினை பதிவு செய்தவுடன்‌ விவரங்கள்‌ உடனடியாக திரையில்‌ தோன்றும்‌. அவ்விவரங்களில்‌ ஏதேனும்‌ திருத்தங்கள்‌ இருப்பின்‌, திருத்தங்களை மேற்கொள்ளவும்‌, விடுபட்டுள்ள விவரங்களையும்‌, புகைப்படத்தையும்‌ பதிவேற்றம்‌ செய்தால்‌
போதுமானதாகும்‌. 

NMMS தேர்வுக்கு மாணவர்கள்‌ சமர்ப்பித்த விண்ணப்பத்தின்‌ அடிப்படையில்‌ ( மாணவரின்‌ பெயர்‌ பத்தாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ சான்றிதழில்‌ எவ்வாறு இடம்‌ பெற வேண்டுமோ அதன்படி) EMIS இணையதளத்தில்‌ திருத்தங்களை மேற்கொண்டு அதன்‌ பின்னர்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.

* மாணவர்‌ பெயா்‌, தந்‌தை / பாதுகாவலர்‌ பெயர்‌, பிறந்த தேதி, பாலினம்‌, கைபேசி எண்‌ போன்ற விவரங்கள்‌ EMIS இணையதளத்தில்‌ உள்ள விவரங்களுடன்‌ ஒத்திருக்கவேண்டும்‌.

*  மாணவரின்‌ பெற்றோர்‌ பயன்படுத்தும்‌ நடைமுறையில்‌ உள்ள கைபேசி எண்ணையே அளிக்க வேண்டும்‌. உதவித்‌ தொகை சார்ந்து அவ்வப்போது குறுஞ்செய்தி அல்லது கடவுச்சொல்‌ விண்ணப்பத்தில்‌ குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கே அனுப்பப்படும்‌ என்பதால்‌ அக்கைபேசி எண்ணை குறைந்தது தொடரும்‌ ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றாமல்‌ இருக்கவேண்டும்‌.

* தேர்வர்கள்‌ விண்ணப்பத்தில்‌ பூர்த்தி செய்துள்ள விவரங்கள்‌ சரிதானா என்பதனைப்‌ பள்ளி ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்த்த பின்னரே பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.

* மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை மாணவர்களிடமிருந்து பெற்று இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட வேண்டும்‌.

* பள்ளி முகவரி என்ற இடத்தில்‌ பள்ளியின்‌ பெயா்‌, முகவரியினை அஞ்சல்‌ குறியீட்டுடன்‌ பதிவு செய்யப்படவேண்டும்‌.

* வீட்டு முகவரி என்ற இடத்தில்‌ பள்ளியின்‌ பெயர்‌ மற்றும்‌ முகவரியினை பதியக்கூடாது. தேர்வரின்‌ வீட்டு முகவரி மட்டுமே பதியப்படவேண்டும்‌.

பெற்றோரின்‌ தொலைபேசி/கைபேசி என்ற காலத்திலும்‌ பெற்றோர்‌ அல்லது பாதுகாவலரின்‌ தொலைபேசி/கைபேசி எண்ணையே பதிவிட வேண்டும்‌. பள்ளியின்‌ தொலைபேசி என்ற இடத்தில்‌ மட்டும்‌ பள்ளியின்‌ தொலைபேசி எண்ணினை பதிவு செய்ய வேண்டும்‌.

பதிவு செய்த விவரங்களை s Declaration form Print out கொண்டு சரியான முறையில்‌ பதிவு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்‌.

பதிவேற்றம்‌ செய்த விவரங்களில்‌ மாற்றம்‌ ஏதேனும்‌ இருப்பின்‌ தேர்வுக்‌ கட்டணத்தினை ஆன்லைனில்‌ செலுத்துவற்குள்‌ சரிசெய்து கொள்ள வேண்டும்‌. தேர்வுக்‌ கட்டணம்‌ செலுத்திய பின்‌ எந்த பதிவுகளும்‌ கண்டிப்பாக மாற்ற இயலாது.

மேற்படி தேர்விற்கான தேர்வுக்‌ கட்டணம்‌ ரூ.50/- வீதம்‌ DGE PORTAL-ல் Online-ல் அனைத்து விண்ணப்பங்களும்‌ பதிவேற்றம்‌ செய்த பிறகு தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்‌. தேர்வுக்‌ கட்டணத்தினை‌ செலுத்த இறுதி நாள்‌ 25.01.2023 மாலை 06.00 மனி.

பதிவேற்றம்‌ முடிந்தவுடன்‌ ஒரு தேர்வருக்கு ரூ.50/- வீதம்‌ விண்ணப்பித்த தேர்வர்களின்‌ விவரப்பட்டியலினை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலர்களிடம்‌ 01.02.2023-க்குள்‌ ஒப்படைக்க வேண்டும். 

கால அட்டவணை

விண்ணப்பங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்யும்‌ காலம்‌: 09.01.2023 - 25.01.2023
விண்ணப்பங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்ய கடைசி நாள்‌ : 25.01.2023
Summary Report உதவி இயக்குநரா அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள்‌ : 01.02.2023

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget