New Vice Chancellors Appointed: 3 பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணைவேந்தர்கள் நியமனம்: ஆளுநர் உத்தரவு
மனோன்மணியம் சுந்தரனார், அழகப்பா, திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களுக்குப் புதிய துணை வேந்தர்கள் நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களுக்குப் புதிய துணை வேந்தர்களை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு ஜி.ரவி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு டி.ஆறுமுகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு என்.சந்திரசேகர் ஆகியோர் புதிய துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணை வேந்தராகப் பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு அவர்கள் பொறுப்பில் இருப்பர் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
யார் இந்த சந்திரசேகர்?
என்.சந்திரசேகர் 35 ஆண்டுக்கும் மேற்பட்ட கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் கொண்டவர். 17 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் கொண்டவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி தலைவர் ஆகவும் கேரள பல்கலைக்கழகம் ஒன்றில், டீன் ஆகவும் பணியாற்றியவர். 21 பிஎச்.டி. ஸ்காலர்களுக்கு வழிகாட்டி உள்ளார். கல்வி மற்றும் ஆராய்ச்சிக் காரணங்களுக்காக, 13 வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்.
யார் இந்த ஜி.ரவி?
டாக்டர் ஜி.ரவி 27 ஆண்டுக்கும் மேற்பட்ட கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் கொண்டவர். 17 ஆண்டுகள் நிர்வாக அனுபவம் கொண்டவர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தலைவர் ஆகவும் தொழில் மற்றும் ஆலோசனைத் துறை தலைவர் ஆகவும் பதவி வகித்துள்ளார். IQAC இயக்குநர் ஆகவும் இருந்துள்ளார்.
8 காப்புரிமைகளுக்குச் சொந்தக்காரர். ரூ.1.54 கோடி மதிப்பிலான 8 ஆராய்ச்சி செய்முறைத் திட்டங்களை நிகழ்த்தி உள்ளார். உலக அளவிலும் தேசிய அளவிலும் கருத்தரங்குகளில் 363 கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.
யார் இந்த டி.ஆறுமுகம்?
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் டீனாக இருந்தவர் டி.ஆறுமுகம். இவர் 32 ஆண்டுக்கும் மேற்பட்ட கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி அனுபவம் கொண்டவர். 11ஆண்டுகள் நிர்வாக அனுபவம் கொண்டவர். கிள்ளிகுளம், தோட்டக்கலைத் துறை, வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகத் தற்போது பணியாற்றி வருகிறார்.
டாக்டர் டி.ஆறுமுகம் சர்வதேச அளவில் 35 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். தேசிய அளவில் 180 கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.அவர் ISBN உடன் இணைந்து, 22 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். ரூ.15.56 கோடி மதிப்பிலான 14 ஆராய்ச்சி செயல்முறைத் திட்டங்களை நிகழ்த்தியுள்ளார். 8 பிஎச்.டி. ஸ்காலர்களுக்கு வழிகாட்டி உள்ளார்.
*
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்