மேலும் அறிய

NEET PG 2023 Registration: முதுநிலை நீட் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - எவ்வாறு விண்ணப்பிப்பது?

முதுநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவிற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ளதால், விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

மார்ச் 5ல் தேர்வு

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இளநிலை நீட் தேர்வு முடிந்து தற்போது மருத்துவ கல்லூரியில் சேர மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை என்.பி.இ. எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது.  இந்நிலையில், 2023ஆம் ஆண்டுக்கான முதுகலை நீட் மருத்துவத் தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கிடையே தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், திட்டமிட்ட தேதியில் நீட் முதுநிலைத் தேர்வு நடைபெறும் என்று  சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

இந்தாண்டுக்கான முதுநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 9ம் தேதி தொடங்கியது.  பிப்ரவரி 9ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கிய விண்ணப்பப்பதிவு இன்று இரவு 11.55 மணிக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத https://nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், பிப்ரவரி 15ஆம் தேதி முதல் திருத்தங்கள் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். பின்னர் பிப்ரவரி 18 முதல் 20ஆம் தேதி வரை மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

  • முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://nbe.edu.in/ செல்ல வேண்டும் 
  • National Board Of Examination In mediacl Science என்ற முகப்பு பக்கம் தோன்றும்.
  • அதில் NEET PG என்பதை கிளிக் செய்து, application link என்று இருப்பதை கிளிக் செய்ய  வேண்டும்.
  • பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும்.

கட்டணம்

பொது, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) மற்றும் பொருளாதாராத்தில் நலிவடைந்த(EWS) பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.4,250 செலுத்த வேண்டும். மேலும், எஸ்டி, எஸ்சி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PwD) பதிவுக் கட்டணமாக 3,250 ரூபாய் செலுத்த வேண்டும்.

ஒட்டுமொத்த முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டுத் திட்டத்தின் மூலம் 50% இடங்களை மத்திய அரசு நிரப்பும்.  இந்த, அகில இந்திய ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவ/ பல் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. மீதமுள்ள 50% இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசு நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!

Embed widget