மேலும் அறிய

நீட் தேர்வு எதற்காக என்பதே தெரியாத மத்திய அரசு- பிடிவாதம் விட்டு ரத்துசெய்ய வேண்டும்- அன்புமணி!

மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது. அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். - அன்புமணி.

நீட் தேர்வுக்கு அஞ்சி  மேலும் ஒரு மாணவி தற்கொலை, இரு மாதங்களில் 5 பேர் தற்கொலை, யிர்க்கொல்லி நீட் தேர்வு எப்போது தான் ஒழியும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தற்கொலைக் காலங்கள்


2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும்,  நீட் தேர்வு  முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன.  இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி,    மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி,  ஏப்ரல் 3-ஆம் தேதி  எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா,   ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி,  இன்று கயல்விழி என இரு மாதத்தில் 5  மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும்  தடுக்க முடியாது.

நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக,  புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும்தான் தமிழக அரசு பேசுகிறது; நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

 

நீட் தேர்வு எதற்காக என்பதே தெரியாமல் நடத்தும் மத்திய அரசு

நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், அதை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை; நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது  குறையவில்லை; மாறாக, இந்த இரு சிக்கல்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன.  இதை தெரிந்து கொண்டும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.

மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது. அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக,  நீட் தேர்வு தோல்வி அச்சத்துக்கு  தீர்வு  தற்கொலை அல்ல என்பதை  மாணவச் செல்வங்கள்  புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணத்தைக் கைவிடவேண்டும்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
13 ஆண்டு காத்திருப்பு: 410 ஆசிரியர்களுக்கு பணி மறுப்பு அநீதியா? அன்புமணி ஆவேசம்
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
இந்தியாவில் STEM கல்வி: ஒரு கோடியை தாண்டிய மாணவர் சேர்க்கை, பெண்கள் பங்களிப்பு எவ்ளோ தெரியுமா?
Thiruvallur District Holiday : ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்
ஆகஸ்ட் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான நியூஸ்

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
TN Weather Update: தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
Embed widget