ECCE: ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்புக்கான பாடத்திட்டம் விரைவில் அறிமுகம்: மத்திய அரசு அறிவிப்பு
ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசிய பாடத்திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசிய பாடத்திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்வி இதில் அடங்கும். அதேபோல, பிறந்தது முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் பராமரிப்பு குறித்தும் தேசிய கட்டமைப்புத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் முடிவு
தேசிய கல்விக் கொள்கை, 2020-ன் அடிப்படையில், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் முன் குழந்தை பருவத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
6 வயதுக்கு முன்னால் குழந்தைகளின் 85 சதவீத மூளை வளர்ச்சி முழுமை அடையும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்வதை நோக்கமாக வைத்திருப்பதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாக்ஷம் அங்கன்வாடி, போஷன் 2.0 திட்டங்கள்
சாக்ஷம் அங்கன்வாடி, போஷன் 2.0 ஆகிய திட்டங்கள், பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தால் மேம்படுத்தப்பட்டன. இவை தாய்மார்கள் மற்றும் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதரவை வழங்கின. குறிப்பாக இவை, பாதுகாப்பான சூழல் சார்ந்த, ஊட்டச்சத்து ஆதரவையும் வளர்ச்சி திட்டங்களையும் வழங்கின.
அதேபோல, முன் குழந்தை பருவ வளர்ச்சியை உருவாக்குவதற்கான தேசிய கட்டமைப்புத் திட்டம், அங்கன்வாடி ஊழியர்களையும் பராமரிப்பாளர்களையும் ஊக்குவிக்குகிறது.
அங்கன்வாடி ஊழியர்களிடம் கருத்து கேட்கப்பட்டு உருவாக்கம்
இந்த பாடத்திட்டங்களுக்கான ஆவணங்களை, பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் (NIPCCD) தயாரித்துள்ளது. முன்னதாக, இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விரைவில் ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்விக்கான தேசிய பாடத்திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதில் 3 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்வி அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிறந்தது முதல் 3 வயது வரையிலான குழந்தைகளின் பராமரிப்பு குறித்தும் தேசிய கட்டமைப்புத் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.