மேலும் அறிய

Naan Mudhalvan Short Film : நான் முதல்வன் திட்டம் மூலம் குறும்படப் போட்டி; ரொக்கப் பரிசு; இன்டெர்ன்ஷிப்‌, வேலை- அரசு அறிவிப்பு

Naan Mudhalvan Short Film Festival: நான் முதல்வன் திட்டம் மூலம் குறும்படப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசு, இன்டெர்ன்ஷிப்‌, வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளன.

நான் முதல்வன் திட்டம் மூலம் குறும்படப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. அத்துடன் இன்டெர்ன்ஷிப்‌, வேலைவாய்ப்புகளும் அளிக்கப்பட உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சரால்‌ தொடங்கப்பட்ட திறன்‌ மேம்பாட்டிற்கான முன்னெடுப்பே "நான்‌ முதல்வன்‌" திட்டம்‌. இத்திட்டம்‌ நம்‌ மாநிலத்தில்‌ ஆண்டுக்கு 12 லட்சம்‌ இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை தரும்‌ திறன்களை வழங்கும்‌ நோக்கத்தில்‌ செயல்பட்டு வருகின்றது.

திரைப்படம்‌ மற்றும்‌ புகைப்படம்‌ எடுப்பதில்‌ திறமை உள்ளவர்களுக்கு அவர்களின்‌ படைப்பாற்றலை வெளிப்படுத்தும்‌ ஒரு வாய்ப்பாக, அவர்களது திறமையை வெளிப்படுத்த "நான்‌ முதல்வன்‌" திட்டத்தின்‌ மூலமாக குறும்படத்‌ திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாநில அளவிலான போட்டியில்‌ 14 வயது முதல்‌ 40 வயதுக்குள்‌ உள்ள அனைவரும்‌ பங்குபெறலாம்‌.

குறும்படத்திற்கான தலைப்புகள்‌

1. பள்ளிக்‌ கல்வியில்‌ சிறுவயதிலேயே திறன்மேம்பாடு கல்வி பயிற்சியின்‌ முக்கியத்துவம்‌. 
2. பாரம்பரிய திறன்களை டிஜிட்டல்‌ மயமாக்குவது எப்படி இன்றைய சமுதாயத்திற்கு உதவும்‌? 
3. தேசிய இலக்குகளை அடைய இளைஞர்களின்‌ சக்தியை தட்டி எழுப்பும்‌ நோக்கில்‌ பயன்படுத்துவதற்கு வேலைவாய்ப்பு திறன்களை வழங்குதல்‌. 
4. திறன்‌ மேம்பாட்டு கல்வி வேலைகளின்‌ எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கிறது? 
5. டிஜிட்டல்‌ சகாப்தத்தில்‌ திறன்கள்‌.
6. நடைமுறை திறன்பயிற்சிகளின்‌ முக்கியத்துவம்‌ (தொழில்கல்வி).

இந்த ஆறு தலைப்புகளின்‌ கீழ்‌ உள்ள குறும்படங்கள்‌ மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்‌. தலைப்பு மற்றும்‌ வரவுகளை உள்ளடக்கிய 6 நிமிடங்களுக்கு மிகாமல்‌ குறும்படங்கள்‌ இருக்க வேண்டும்‌. தமிழ்‌ அல்லது ஆங்கில மொழிகளில்‌ உள்ள குறும்படங்களே ஏற்றுக்கொள்ளப்படும்‌. அது புனைகதை, ஆவணப்படம்‌, அனிமேஷன்‌ போன்ற எந்த வகையிலும்‌ இருக்கலாம்‌.

தேர்ந்தேடுக்கப்பட்ட குறும்படத்திற்கு மட்டும்‌ முதல்‌ பரிசாக ரூபாய்‌ 50,000, இரண்டாம்‌ பரிசாக ரூபாய்‌ 25,000, மூன்றாம்‌ பரிசாக ரூபாய்‌ 10,000 வழங்கப்படும்‌.

புகைப்படப்‌ போட்டிக்கான தலைப்பு: "தமிழகத்தில்‌ அழிந்துவரும்‌ பாரம்பரிய திறன்கள்‌".

உங்கள்‌ வீடியோ மற்றும்‌ புகைப்படங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள்‌:  01.02.2023. 

பங்கேற்பாளர்கள்‌ சமூக ஊடகங்களில்‌ இடுகையிடுவதன்‌ மூலம்‌ பங்கேற்கலாம். மற்றும் socialmedia@naanmudhalvan.in மின்னஞ்சலில்‌ சமர்ப்பிக்கலாம்‌. இதில்‌ வெற்றிப்பெறும்‌ குறும்படதாரர்களுக்கு "நான்முதல்வன்‌" திட்டம்‌ அல்லது புகழ்பெற்ற திரைப்படம்‌ & தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களுடன்‌ 3 மாத இன்டெர்ன்ஷிப்‌ மற்றும்‌ வேலைவாய்ப்புகளும்‌ வழங்கப்படும்‌. மேலும்‌ விவரங்களுக்கு https://www.naanmudhalvan.tn.gov.in/ இணையதள முகவரியை பார்க்கவும்‌.

இவ்வாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுப்பின் கீழ் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget