மேலும் அறிய

National Award to Teachers 2023: கல்லூரி ஆசிரியர்களுக்கும் தேசிய விருது; மத்திய அரசு அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?

உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.  

உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.  

பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதுபோலவே உயர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களுக்கும், டாக்டர் ராதாக்ருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி தேசிய ஆசிரியர் விருது வழங்கப்படும். குடியரசுத் தலைவர் இந்த விருதை வழங்க உள்ளார். இதுகுறித்து யுஜிசி அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது. 

பாலிடெக்னிக், ஐடிஐ, பிரதம மந்திரி இளைஞர் பயிற்சி திட்டம் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக ஐடிஐ, பாலிடெக்னிக் ஆசிரியர்கள் 25 பேருக்கு தேசிய ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. உயர் கல்வி நிறுவன ஆசிரியர்கள் 25 பேருக்கு தேசிய ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. உடன் சான்றிதழும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட உள்ளது.

எனினும் இது 3 பிரிவாகப் பிரிக்கப்பட்டு, பொறியியல் & தொழில்நுட்பம், கட்டிடக்கலை ஆசிரியர்கள் முதல் பிரிவாகவும், கணிதம், இயற்பியல், உயிரியல், ரசாயன அறிவியல், மருத்துவம், மருந்தகம்  உள்ளிட்ட  முழுமையான அறிவியல் பிரிவு ஆசிரியர்களுக்கு (Pure Sciences) இரண்டாவது பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவதாக, கலை மற்றும் சமூக அறிவியல், மனிதநேயம், மொழிகள், சட்ட ஆய்வுகள்,வணிகம், மேலாண்மை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஜூலை 30 கடைசித் தேதி ஆகும். 

என்ன தகுதி?

* ஆசிரியர்கள் முழுநேரம் பணிபுரிபவராக இருக்க வேண்டும். 
* குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே இந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியும். 
* 55 வயதைக் கடந்தவர்களாக இருக்கக்கூடாது. 
* துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் விண்ணப்பிக்க முடியாது. 

விண்ணப்பிப்பது எப்படி?

ஆசிரியர்கள் nat.aicte-india.org என்ற இணைப்பை க்ளிக் செய்து, விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில், முன்பதிவு (Register) என்னும் பகுதியில், எந்த கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகிறீர்கள் என்பதில் ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அதைக் குறிப்பிட்ட பிறகு கேட்கப்படும் விவரங்களைப் பூர்த்தி செய்து, முன்பதிவு செய்ய வேண்டும்.  

லாகின் செய்ய... 

* ஆசிரியர்கள் https://nat.aicte-india.org/login என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 
* அதில், மெயில் ஐடி, கடவுச் சொல்லைப் பதிவிட்டு, லாகின் செய்ய வேண்டும். 
* பிறகு தேவையான விவரங்களை உள்ளிட்டு, விருதுக்கு விண்ணப்பிக்கலாம். 

விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று படிப்படியாக அறிந்துகொள்ள https://natapi.aicte-india.org/files/User_Manual_NTA.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.  

விண்ணப்பப் படிவத்தை முழுவதுமாகப் பூர்த்தி செய்ய வேண்டும்,. எந்த பகுதியையும் காலியாக விடக்கூடாது. அனைத்து விண்ணப்பங்களும் சுய சான்றிதழ் (self-attested documentary evidences) அளிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும்.முழுவதுமாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் தகுதியற்றவையாகக் கருதப்பட்டு, நிராகரிக்கப்படும். 

தங்களுடைய சாதனைகள், செயல்பாடுகள் குறித்த 800 வார்த்தைகள் அடங்கிய ஆவணத்தையும் ஆசிரியர்கள் இணைக்க வேண்டும் 

விருது வழங்குவது குறித்தான விதிமுறைகளை விரிவாக அறிந்துகொள்ள https://natapi.aicte-india.org/files/Guidelines.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget