மேலும் அறிய

Medical Rank List: மருத்துவப் படிப்பு தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த விழுப்புரம் மாணவர்... யார் தெரியுமா ?

Medical Rank List 2024: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவப் படிப்புகளுக்கான பட்டியலை வெளியிட்டார்.இதில் விழுப்புரம் மாணவர் ரஜனிஷ் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

விழுப்புரம் : தமிழகத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த விழுப்புரத்தை சார்ந்த ரஜனீஷ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் பயில உள்ளதாகவும் சிறுவயது முதல் மருத்துவர் ஆக வேண்டுமென லட்சியமாக கொண்டு பயின்றதாக தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் 2024-25ஆம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பட்டியலை வெளியிட்டார்.

இதில் விழுப்புரம் மாணவர் ரஜனிஷ் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். சென்னை, அயனப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவர் சையது ஆரிஃபின், சேத்துப்பட்டைச் சேர்ந்த மாணவி ஷைலஜா ஆகியோர் அடுத்தடுத்து 2, 3ஆவது இடங்களைப் பெற்றுள்ளனர்.

ரஜனீஷ்க்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய பெற்றோர் 

நீட் தேர்வினை தமிழகத்தில் இந்தாண்டு 1,52,920 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 89,198 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். நீட் தேர்வில் தமிழகத்தில் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சார்ந்த ரஜனீஷ் என்ற மாணவன் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் முதல் மதிப்பெண்ணான 720க்கு 720 மதிப்பெண் பெற்றிருந்தார். இன்று வெளியிடப்பட்ட மருத்துவ தரவரிசை பட்டியலில் முதல் ரஜனீஷ்  இடம்பிடித்துள்ளதால் மாணவனின் பெற்றோர் ரஜனீஷுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தமிழக அளவில் முதலிடம்

தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் பயில உள்ளதாக தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவன் ரஜனீஷ்  தெரிவித்துள்ளான். மேலும் நீட் தேர்வினை பொருத்தவரை மாக் டெஸ்ட் அதிகம் எழுதினால் தேர்வினை எழுதுவது சுலபமாக இருக்கும் என்றும் புத்தகத்தில் ஒரு வரி விடாமல் படிக்க வேண்டும் எனவும் பதினோராம் வகுப்பிலிருந்து கோச்சிங் செண்டர் மூலம் பயிற்சி மேற்கொண்டு முதல் முயற்சியிலையே நீட் தேர்வில் வெற்றி பெற முடிந்ததாக மாணவர் ரஜனீஷ்  கூறியுள்ளார். சிறுவயது முதல் மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் கல்வி பயின்றதாகவும் ரஜனீஷ் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை இடங்கள்?

தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளைப் பொறுத்தவரை 9,800 எம்பிபிஎஸ், 2150 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்குகிறது. இந்த இடங்களுக்கு 43 ஆயிரத்து 63 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம் ஆகும்.அரசுக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில், 6,630 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

அதேபோல அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3,733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களுக்கு 495 மருத்துவ இடங்களும் 125 பல் மருத்துவ இடங்களும் உள்ளன. இந்த இட ஒதுக்கீட்டில், 669 மதிப்பெண்களைப் பெற்று சென்னையைச் சேர்ந்த ரூபிகா முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
TN Rain: இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Salem Prisoner Attacks Police : ’’எனக்கு சிகரெட் வேணும்’’போலீஸை அடிக்க பாய்ந்த கைதி..Gujarat Car Funeral Ceremony : ’லக்கி’ காருக்கு இறுதிச்சடங்கு! வியக்க வைத்த விவசாயிTVK Vijay Meet Army Officers | ராணுவ வீரர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்? கதறும் பாஜகவினர்Muthusamy | முத்துசாமியின் உள்ளடி வேலை! ஷாக்கில் ஈரோடு திமுக! யாரும் எதிர்பார்க்காத அறிவிப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
ஒரு கொடி கம்பம் நடுவதற்கு ஒரு யுத்தம் செய்ய வேண்டியுள்ளது - பொங்கிய திருமாவளவன்
TN Rain: இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
இன்று இரவு 11 மாவட்டங்களில் மழை இருக்கு: எந்தெந்த மாவட்டங்கள்.. லிஸ்ட் இதோ.!
டிரம்ப் பேசும்போது
டிரம்ப் பேசும்போது "மோடி, மோடி" என பறந்த கோஷம்?. ஆனால் உண்மையில் என்ன நடந்தது?
"ஆணாதிக்கம் ஒன்னும் உங்களை தடுக்கிறதில்ல" நிர்மலா சீதாராமன் நறுக்!
ISRO Sivan:
"2040 ஆம் ஆண்டில் நிலவில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கால் பதிப்பார்கள்" - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்
"அம்பேத்கரை அவமானப்படுத்திட்டாங்க.. இந்த இடஒதுக்கீட்டை ஏத்துக்க மாட்டோம்" அமித் ஷா அதிரடி
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
4B movement: ட்ரம்புக்கா ஓட்டு போட்டீங்க..! நோ டேட்டிங், நோ கல்யாணம், உடலுறவு - ஆண்களுக்கு எதிராக அமெரிக்க பெண்கள் போராட்டம்
‘திமுகவிற்கு முட்டு கொடுக்கிறியா’... விஜய் வந்தவுடன் எவ்வளவு ஹைப் - திருமாவின் ஆதங்க பேச்சு
‘திமுகவிற்கு முட்டு கொடுக்கிறியா’... விஜய் வந்தவுடன் எவ்வளவு ஹைப் - திருமாவின் ஆதங்க பேச்சு
Embed widget