மேலும் அறிய

உயர் கல்வியில் முக்கியத்துவம் பெரும் மாநில அரசுகள்: அகில இந்திய உயர்கல்வி அறிக்கை கூறுவது என்ன?

ஆந்திராவின் மொத்த உயர்கல்வி நிறுவனங்களில் தனியார் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 81 சதவிகிதமாக உள்ளது. அதைத் தொடர்ந்து, தெலுங்கானாவில் 80%, உத்தரபிரதேசத்தில் 78.5%, தமிழ்நாட்டில் 77.6% தனியார் கல்லூரிகளைக் கொண்டுள்ளன. 

2019-20 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கையை  மத்திய கல்வி அமைச்சர் நேற்று வெளியிட்டார்.  2015-16 முதல் 2019-20 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை 11.4% வளர்ச்சியடைந்திருப்பதாகவும், இந்தக் காலக்கட்டத்தில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவிகளின் எண்ணிக்கை 18.2% அதிகரித்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். 

நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்ன?

1. இந்தியாவின் ஒட்டுமொத்த கல்வி கொள்கை மற்றும் வளர்ச்சி குறித்த சொல்லாடல்கள் ஐஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களை சுற்றியிருந்தாலும், நாட்டின் 90 சதவிகிதத்துக்கும் அதிகமான மாணவர்கள் மாநிலங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் இருந்து தான் பட்டம் பெறுகின்றனர்.   

உதாரணமாக, நாட்டின் மொத்த உயர்க்கல்வி நிறுவனங்களில், தனியார் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 78.6 சதவிகிதமாக உள்ளது. மீதமுள்ள 21.4% மட்டுமே அரசு கல்லூரிகளாக உள்ளன. இருப்பினும், மொத்த மாணவர் சேர்க்கையில் தனியார் கல்வி நிறுவனங்களின் பங்கு 66.3% ஆக உள்ளது. அரசு கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 33.7 சதவிகிதமாக உள்ளது.

உயர் கல்வியில் முக்கியத்துவம் பெரும் மாநில அரசுகள்:  அகில இந்திய உயர்கல்வி அறிக்கை கூறுவது என்ன?

2. ஐஐடி, என்ஐடி போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்விநிறுவனங்களை விட, ஒவ்வொரு ஆண்டும், முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களை மாநில அரசு பல்கலைக்கழகங்கள் (29.8%) உருவாக்கி வருகின்றன.

3. மாநில அரசு கல்லூரிகளில் தான் ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருகின்றனர்.  

4. நாட்டின் 60%க்கும் அதிகமான உயர்க்கல்வி நிறுவனங்கள் ஊரகப் பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இதனால்,  பட்டியலின/பழங்குடி மற்றும் பெண்கள் அதிகளவில் பயனடைந்து வருகிறனர்.எனினும், நாட்டின்  உயர்க்கல்வி தொடர்பான பெரும்பாலான விவாதங்களில் ஊரகப் பகுதியில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் உரிய முக்கியத்துவம் பெறுவதில்லை. 

உயர்கல்வியில் சேரும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

எனவே, இந்தியாவின் உயர்க்கல்வி கொள்கை வளர்ச்சியில் மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவிலான செயல்திட்டங்கள் முக்கியமாகிறது. உயரக்கல்வி நிறுவனங்களின் அதிகாரம், நிதியுதவி போன்ற முடிவுகளில் மாநில அரசுகளின் கோரிக்கையை மத்திய அரு செவிசாய்க்க முன்வர வேண்டும். அடுத்த, ஐஐடி கல்வி நிறுவனத்தை எந்த மாநிலத்தில் அமைக்கலாம் என்ற மத்திய அரசு யோசிப்பதும்? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் ஐஐடி கல்வி நிறுவனத்தை கொண்டு வருவோம் என்று மாநில கட்சிகள் மக்களிடம் கோரிக்கை வைப்பது அர்த்தமற்றதாகவே தோன்றுகிறது.                         

2019-20 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

1.   கடந்த 2018-19 ஆம் ஆண்டு 3.74 கோடியாக இருந்த மொத்த மாணவர் சேர்க்கை, 2019-20ஆம் ஆண்டில் 3.85 கோடியாக அதிகரித்து, 11.36 லட்சமாக (3.04%) வளர்ச்சி அடைந்துள்ளது. 2014-15-ஆம் ஆண்டில் மொத்த மாணவர் சேர்க்கை 3.42 கோடியாக இருந்தது.

உயர் கல்வியில் முக்கியத்துவம் பெரும் மாநில அரசுகள்:  அகில இந்திய உயர்கல்வி அறிக்கை கூறுவது என்ன?

2. ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம், 2019-20 ஆம் ஆண்டில் 27.1%ஆக உள்ளது. இது கடந்த 2018-19 ஆம் ஆண்டில் 26.3%ஆகவும், 2014-15 ஆம் ஆண்டில் 24.3%ஆகவும் இருந்தது.

3.  பாலின சமநிலை குறியீட்டின்படி உயர் கல்வித்துறையை அணுகுவதில் ஆண்களை விட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தனர். 2018-19-ஆம் ஆண்டு 1.00 ஆக இருந்த இந்தக் குறியீடு, 2019-20-ஆம் ஆண்டில் 1.01 ஆக அதிகரித்தது.

4.  2019-20 ஆம் ஆண்டில், உயர் கல்வியில் மாணவர்கள்-ஆசிரியர் விகிதாச்சாரம் 26 ஆக இருந்தது.

QS World University Rankings 2022: முதல் 200 இடங்களில், 3 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்தன!

5. 2019-20-ஆம் ஆண்டில்: பல்கலைக்கழகங்கள்: 1,043 (2%); கல்லூரிகள்: 42,343 (77%); தனித்து இயங்கும் நிறுவனங்கள்: 11,779 (21%) என்ற எண்ணிக்கையில் உள்ளன.உயர் கல்வியில் முக்கியத்துவம் பெரும் மாநில அரசுகள்:  அகில இந்திய உயர்கல்வி அறிக்கை கூறுவது என்ன? 

6. இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் 3.38 கோடி மாணவர்கள் சேர்ந்தனர். இவர்களில் 85 சதவீதத்தினர் (2.85 கோடி), மனித வளம், அறிவியல், வணிகவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவ அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினி சார்ந்த படிப்புகளில் இணைந்தனர்.

7. கடந்த 2014-15-ஆம் ஆண்டில் 1.17 லட்சமாக இருந்த முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2019-20-ஆம் ஆண்டில் 2.03 லட்சமாக உயர்ந்தது.

8. மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 15,03,156 ஆகும். இவர்களில் ஆண்கள் 57.5%, பெண்கள் 42.5%.

9. மாநில அளவில், ஆந்திராவின் மொத்த உயர்கல்வி நிறுவனங்களில் தனியார் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 81 சதவிகிதமாக உள்ளது. அதைத் தொடர்ந்து, தெலுங்கானாவில் 80%, உத்தரபிரதேசத்தில் 78.5%, தமிழ்நாட்டில் 77.6% தனியார் கல்லூரிகளைக் கொண்டுள்ளன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

S Ve Sekar : ”வாயத் தொறந்தாலே பொய்! அண்ணாமலைக்கு தகுதியே இல்ல” வெளுத்துவாங்கும் எஸ்.வி.சேகர்Sekar babu : Madurai Theft CCTV | ’’மதுரையை மிரட்டும் குரங்கு குல்லா கொள்ளையர்கள்’’நடுங்கவைக்கும் CCTV காட்சிகள்Karur BJP Members Join DMK : தட்டித்தூக்கிய செந்தில் பாலாஜி ஷாக்கான அண்ணாமலை ஸ்டாலின் போடும் கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெண்களுக்கு மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. ஒரே பார்முலா.. அதிரடி காட்டும் காங்கிரஸ்!
மாதம் ரூ. 3000.. இலவச பஸ் பயணம்.. பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
கருவறைக்குள் ஆ.ராசாவால் நுழைய முடியுமா? பரபரப்பை கிளப்பிய தமிழக பாஜக!
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
12 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர் நியமனம் இல்லை; காலியிடங்களை அதிகரிக்க கோரிக்கை- ட்ரெண்டாகும் பதிவுகள்
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் சரஸ்வதி மகால் நூலகம்: புதிய நூல்கள் வெளியிடுவது குறைகிறது
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
காலியாகும் சீமான் கூடாரம்! விஜய்க்கு ஜாக்பாட்! - எஸ்.வி சேகர் போடும் குண்டு!
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; முதல்வரே மன்னிப்பு கேளுங்கள் - சீறிய அன்புமணி
அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
அமெரிக்க அதிபர் தேர்தல்.. எந்த மாகாணத்தில் யார் வெற்றி.. முழு விவரம்!
US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?
US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?
Embed widget