காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பள்ளி விடுமுறை!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளம் முகாம் காரணமாக நாளை 12 பள்ளிகளுக்கு விடுமுறை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் ஒன்பது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாலாஜாபாத்- அவளூர் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் வாலாஜாபாத் தாலுக்காவிற்கு உட்பட்ட அவளூர் மேல்நிலைப்பள்ளி, தம்மனூர் நடுநிலைப்பள்ளி, காமராஜபுரம், அங்கம்பாக்கம், ஆசூர், இளையனார்வேலூர்,நெல்வேலி, கீழ் புத்தூர், கன்னடியன் குடிசை, சித்தாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட வர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமாக செயல்படும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட சிவன் தாங்கள் தொடக்கப்பள்ளி, குன்றத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட சீனிவாசபுரம் நடுநிலைப்பள்ளி ஆகிய 12 கிராம பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டத்தில் கனமழையில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்கப்பட்டுள்ள தற்காலிக அரசு நிவாரண முகமாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் (15.11.2021) விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புழுதிவாக்கம், செம்மஞ்சேரி, கோவிலம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மகளிர் உயர்நிலைப் பள்ளிகளிலும் மற்றும் செம்மஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும் மழை நீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் (15.11.2021) விடுமுறை அளிக்கப்படுகிறது என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
‛அவரை என்னனு நெனச்சீங்க...’ வார்னருக்காக வரிந்து கட்டி களமிறங்கிய மனைவி!
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.