499 மார்க்... மாநிலத்தில் முதலிடம்... சாதித்த கூலித் தொழிலாளியின் மகளை பட்டாசு வெடித்து வரவேற்ற பள்ளி
காவிய ஜனனி வரும் போது பள்ளியில் சரவெடி வைத்து வெடிக்கச் செய்து அனைத்து ஆசிரியர்களும் கைகுலுக்கி கைதட்டி வரவேற்றனர்.
கமுதி தனியார் மெட்ரிக் பள்ளி மாணவி 499 மார்க்குகள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். கூலித் தொழிலாளியின் மகளான இவருக்கு பட்டாசு வெடித்து பள்ளி நிர்வாகம் வரவேற்பு அளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள ரஹ்மானியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி 'காவியஜனனி' 499 மார்க்குகள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். இவர், தமிழ் 99, ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என மொத்தம் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
499 மதிப்பெண்கள்.. கூலித் தொழிலாளியின் மகள் சாதனைhttps://t.co/wupaoCz9iu | #Ramanathapuram #10thResult #10thExam pic.twitter.com/gRpTigA28e
— ABP Nadu (@abpnadu) May 10, 2024
தந்தை தர்மராஜ் கூலி வேலை, தாயார் வசந்தி மளிகை கடையில் வேலை பார்க்கிறார். கமுதி தனியார் மெட்ரிக் பள்ளி மாணவி 499 மார்க்குகள் எடுத்து மாநிலத்தில் முதலிடம் பிடித்த கூலித் தொழிலாளியின் மகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
காவிய ஜனனி வரும் போது பள்ளியில் சரவெடி வைத்து வெடிக்கச் செய்து அனைத்து ஆசிரியர்களும் கைகுலுக்கி கைதட்டி வரவேற்றனர். பின்னர் ஆசிரியர்கள் பெற்றோர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர்.