மேலும் அறிய

K Ramachandran: தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஒரே தமிழக ஆசிரியர்; யார் இந்த ராமச்சந்திரன்?

National Teacher Award 2022 Winner K Ramachandran: அவர்களுக்கு இணைய வழியில் கற்பிக்க முடிவெடுத்து, செல்போன்களைத் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தவர் ஆசிரியர் ராமச்சந்திரன்.

2022ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை, தமிழ்நாட்டில் இருந்து ஒரே ஓர் ஆசிரியர் அதுவும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் பெற்றுள்ளார். யார் இவர்? பார்க்கலாம். 

மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றி, இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அவரின் பணிகளைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை அடுத்து நாட்டில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, இந்த நாளில் மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் அனைவருக்கும் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் (அறிவியல் மாளிகை) ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி, குடியரசுத் தலைவர் கையால் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களில் தகுதியான ஆசிரியர்களை, அந்தந்த மாநில அரசுகள் பரிந்துரைப்பது வழக்கம். அந்த வகையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 6 ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறையின் தேர்வுக்குழு பரிந்துரை செய்தது.

இவர்களுக்கான நேர்காணல் தேர்வு, தேசிய அளவில் தனி நடுவரின் முன்னிலையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இதில் இருந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் கே.ராமச்சந்திரன் 2022ஆம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

குறையும் தமிழகப் பிரதிநிதித்துவம்

விருதுப் பட்டியலில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துகொண்டே வருகிறது. 2020ஆம் ஆண்டு ஆசிரியர்கள் சரஸ்வதி, திலிப் ஆகிய 2 பேர் விருது பெற்றனர். 2021ஆம் ஆண்டும் ஆசிரியர்கள் ஆஷா தேவி மற்றும் லலிதா என்னு இருவர் பெற்ற நிலையில், 2022ஆம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஒரே ஓர் ஆசிரியர் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

K Ramachandran: தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஒரே தமிழக ஆசிரியர்; யார் இந்த ராமச்சந்திரன்?

யார் இந்த ராமச்சந்திரன்?

ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஒன்றியத்தில், கீழாம்பல் கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கே.ராமச்சந்திரன்.

கோவிட் கால உதவி

கொரோனா காலத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் விளிம்புநிலைக் குழந்தைகளின் கல்வி தடைப்பட்டது. அவர்களுக்கு இணைய வழியில் கற்பிக்க முடிவெடுத்து, செல்போன்களைத் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தவர் ஆசிரியர் ராமச்சந்திரன்.

கிராமத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்குப் பயிற்சி வழங்கி வருகிறார். இதன்மூலம் கிராமத்து இளைஞர்களை அரசு ஊழியர்களாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். 

தொடக்கப் பள்ளிக்கு தனி யூடியூப் பக்கம்!

students skills என்ற பெயரில் யூடியூபில், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு எனத் தனியாக கணக்கைத் தொடங்கி, மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர்ந்து வருகிறார். 

தமிழர்களின் தொன்மையும் பெருமையுமான திருக்குறளின் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்தில் விதைத்து வருகிறார். தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறளைக் கற்றுக் கொடுத்து, குறள்களை ஒப்புவிக்க வைக்கிறார். 

K Ramachandran: தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஒரே தமிழக ஆசிரியர்; யார் இந்த ராமச்சந்திரன்?

அதேபோல அரசின் திட்டங்களான எண்ணும் எழுத்தும் உள்ளிட்டவற்றையும் சிறப்புறக் கற்பித்து, யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரனுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
Karthigai Deepam: கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக்! உண்மையை சொன்னானா மகேஷ்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக்! உண்மையை சொன்னானா மகேஷ்? கார்த்திகை தீபத்தில் இன்று
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
Manjummel Boys Making Video: மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
US Threatens Ukraine: நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
Embed widget