மேலும் அறிய

வாட்ஸ்-அப்பில் முன்பதிவு செய்தால் போதும் : டிஎன்பிஎஸ்சி பாடநூல் உங்களுக்கு! எப்படி தெரியுமா?

குரூப்1, குரூப்2,  குரூப் 2 ஏ, குரூப்,4 மற்றும் வி.ஏ.ஓ போன்ற தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்காக..

அரசுப்பணித்தேர்வுகளை நோக்கிக் காத்திருக்கும் மாணவர்களின் நலனுக்காக வாட்ஸ்-அப்பில் இலவசமாக டிஎன்பிஎஸ்சி பாடநூல் அனுப்பப்படும் எனவும் அதற்கு முன்னதாக முன்பதிவு செய்வது கட்டாயம் என ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி தெரிவித்துள்ளது.

அரசாங்க பணிதான் எனக்கு வேண்டும் என்று பல்வேறு கனவுகளோடு இளைஞர்கள் தேர்விற்காகக்  காத்திருக்கின்றனர். இதற்காக விடா முயற்சியோடு பலர் தொடர்ந்து படித்தும் வருகின்றனர். இதற்காக அகாடமியில் அதிக அளவு பணத்தினைக் கட்டி படிக்கக்கூடிய சூழலை எல்லாம் நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம். இருந்தப்போதும் ஏதோ ஒரு காரணத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தோல்வியை சந்திக்கின்றனர். ஒரு புறம் இருக்க தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பொதுத்தேர்வுகளுக்கு என்ன புத்தகத்தினைப் படிக்க வேண்டும்? எது சிறந்தது என்று பலர் இன்னமும் யோசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது முகநூல், யூடிப் போன்ற சமூக வலைத்தளத்தில் ஆன்லைன் வகுப்புகள் போன்றவற்றை பலர் எடுக்கத்தொடங்கிவிட்டனர். ஆனாலும் அதில் எந்தளவிற்கு நம்பிக்கை தன்மை இருக்கும் என்பதில் பலருக்கு சந்தேகம் எழுகிறது.

வாட்ஸ்-அப்பில் முன்பதிவு செய்தால் போதும் :  டிஎன்பிஎஸ்சி பாடநூல் உங்களுக்கு! எப்படி தெரியுமா?

இச்சூழலில் தான் சென்னையில் உள்ள ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் வீரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் பல மாணவர்கள் குரூப் 1, குரூப்2,  குரூப் 2 ஏ, குரூப்,4 மற்றும் வி.ஏ.ஓ போன்றத் தேர்வுகளுக்கு தயாராகிவருகின்றனர்.  இவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக புதிய பாடத்திட்டத்தின் படி, அனைத்து வகுப்பு சமச்சீர் புத்தகங்களைக் கொண்டு தேர்வின் அடிப்படையில் பாடநூல் தயாரிக்கப்பட்டுள்ளது என அகாடமி தெரிவித்துள்ளது. இதுவரை 6 முதல் 12 ஆம் வகுப்பின் சமர்ச்சீர் புத்தகங்களை மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது அகாடமி வெளியிட்டுள்ள டிஎன்பிஎஸ் பாடநூல் நிச்சயம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என அகாடமி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ்-அப்பில் முன்பதிவு செய்தால் போதும் :  டிஎன்பிஎஸ்சி பாடநூல் உங்களுக்கு! எப்படி தெரியுமா?

இந்நிலையில் இந்தப்பாடப்புத்தகத்தினை பெறுவதற்கு நிச்சயம் மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். எனவே மிகவும் சுலபமாக பாடநூலை பெறுவதற்கான வசதிகளை அகாடமி ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, டிஎன்பிஎஸ்சி பாடநூல் புத்தகத்தைப் பெற விரும்புவோர் முதலில், 91760 84468 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாக உங்களின் முகவரியை முழுவதுமான டைப் செய்து முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.  இதனையடுத்து முன்பதிவு செய்த அனைவருக்கும் பிடிஎப் வடிவில் பாடநூல் அனுப்பப்படும் என ஆட்சித்தமிழ் ஐ. ஏ.எஸ் அகாடமி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அறிவிப்புத்தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமியில் நேரிலோ அல்லது 91763 92791, 99439 46464 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு கூடுதல் விபரங்களை அறிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay - Seeman:
Vijay - Seeman: "மாணவ - மாணவியரை ஊக்கப்படுத்திய விஜய்” - நெகிழ்ந்து போன சீமான்.. என்ன சொன்னார் தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Vijay Honours Students: மாணவர்கள் என்ன படிக்கலாம்?- எப்படி துறை தேர்வு செய்யலாம்?- கேரியர் குறித்து விஜய் கொடுத்த டிப்ஸ்
Thalapathy Vijay:
"எனக்கு பயமா இருக்கு” - போதைப்பொருள் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விஜய் அட்வைஸ்
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
Kalki 2898AD : முதல் நாளிலே 150 கோடிக்கு மேல் வசூல் செய்த கல்கி 2898 AD!
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு; பிளஸ் 2 அடிப்படையில் சேர்க்கை- தமிழக அரசு தனித்தீர்மானம்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Delhi Airport Roof Collapse: பிரதமர் மோடி திறந்து வைத்த டெல்லி விமான நிலைய முனையம் - மூன்றே மாதங்களில் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
Embed widget