மேலும் அறிய

CSIR UGC NET 2023: சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தகுதித்தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு; பதிவிறக்கம் செய்வது எப்படி?

தேசிய தகுதித் தேர்வுக்கான (நெட்)  ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் (CSIR- Council of Scientific & Industrial Research) நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான (நெட்)  ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 84 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை நடத்தப்படுகிறது. 

சி.எஸ்.ஐ.ஆர். தகுதித் தேர்வு அறிவிப்பு 

வேதியியல், புவியியல், சுற்றுச்சூழல், அறிவியல், இயற்பியல், உயிரியல் போன்ற படிப்புகளுக்கான தகுதித் தேர்வினை சி.எஸ்.ஐ.ஆர். பிரிவின் மூலம் பல்கலைக்கழக மானிய குழு அறிவித்தது. கடந்தாண்டு டிசம்பர், 2022 மற்றும் ஜூன்,2023 ஆகிய இரண்டிற்கும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எப்போது? 

விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்ட போதும், ஜூன் மாதம் 6,7,8 ஆகிய மூன்று நாட்களில் தேர்வு நடைபெறும் என்ற அறிவிப்பில் மாற்றம் இல்லை என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. ஜூன் 6ஆம் தேதி லைஃப் சைன்ஸ் தேர்வு இரண்டு ஷிஃப்டுகளில்  நடைபெற உள்ளது. அதேபோல 7ஆம் தேதி வேதியியல் அறிவியல், கணித அறிவியல் ஆகிய தேர்வுகள் முறையே காலை, மதிய ஷிஃப்டுகளில் நடைபெற உள்ளன. 

அதேபோல ஜூன் 8ஆம் தேதி இயற்பியல் அறிவியல் மற்றும் பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல் பாடங்கள் நடக்க உள்ளன. 

இந்த நிலையில், நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

தேர்வர்கள் 011 40759000, 011-69227700 ஆகிய எண்களைபுகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.

இ-மெயில் முகவரி - csirnet@nta.ac.in

தேர்வர்கள்  https://nta.ac.in/Download/Notice/Notice_20230603210036.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ளலாம். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!
முதல்வர் விஜயின் மௌனம் வேதனை அளிக்கிறது: பகுதிநேர ஆசிரியர்கள்..
முதல்வர் விஜயின் மௌனம் வேதனை அளிக்கிறது: பகுதிநேர ஆசிரியர்கள்..
Student Scholarship : வெளிநாட்டில் படிக்க போறீங்களா.? ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை.! விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
வெளிநாட்டில் படிக்க போறீங்களா.? ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை.! விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
School Education : பதவி உயர்வு, கட்டாய மாறுதல்.! அரசுப் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு- செப்.25 தான் கடைசி தேதி
பதவி உயர்வு, கட்டாய மாறுதல்.! அரசுப் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு- செப்.25 தான் கடைசி தேதி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK : 5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
5 லட்சம் நெல் மூட்டைகள் போச்சு.! சொல் புத்தியும் இல்ல.. சுய புத்தியும் இல்ல- TVK அரசை விளாசிய இபிஎஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
தமிழ்நாட்டில் பரவும் உன்னிக் காய்ச்சல்: உடலில் இந்த புண்ணா? உயிருக்கே ஆபத்து!
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
Jailer 2 VS Om: ரஜினிக்காக ஒதுங்கிக் கொள்கிறாரா தனுஷ்? தள்ளிப்போகிறதா ஓம் ரிலீஸ்?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Honda QC3 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
Iran Vs America: '7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
'7 நாட்களில் ஹார்முஸை திறக்க தயார், ஆனால்...'; நிபந்தனையுடன் அமெரிக்காவிற்கு ஈரான் முன்மொழிவு
Donald Trump: “எங்கள்ட ஆயுதங்கள் தீர்ந்துடுமா.? கோழைகளும், துரோகிகளும் தான்..“ கொந்தளித்த ட்ரம்ப் கூறியது என்ன.?
“எங்கள்ட ஆயுதங்கள் தீர்ந்துடுமா.? கோழைகளும், துரோகிகளும் தான்..“ கொந்தளித்த ட்ரம்ப் கூறியது என்ன.?
Embed widget