JEE Main Result 2022: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகின- பார்ப்பது எப்படி?
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் இன்று (ஆகஸ்ட் 8) வெளியாகி உள்ளன.

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பதற்கான நுழைவுத் தேர்வான ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் இன்று (ஆகஸ்ட் 8) வெளியாகி உள்ளன. அதைத் தேர்வர்கள் பார்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.
இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்தத் தேர்வு ஜூலை 25 முதல் 30ஆம் தேதி வரை இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற்றது. இதற்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அத்துடன் ஆன்சர் கீ, தரவரிசைப் பட்டியல் ஆகியவையும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டிருந்தது.
தேர்வு முடிவுகள்
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
* தேர்வு தொடர்பான விவரங்களை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
* அதில், 'Download Score Card of JEE(Main) Session 2_Paper 1' என்ற லிங்க்கை க்ளிக் செய்யவும்.
* அதில் தேர்வர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் ரகசியக் குறியீட்டு எண் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.
* 2022ஆம் ஆண்டுக்கான ஜூலை ஜேஇஇ மெயின் தேர்வு தாள் 1-ன் முடிவுகள் திரையில் தோன்றும்.
* ஜேஇஇ மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஜே.இ.இ. மெயின் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், ஐஐடிகளுக்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (ஆகஸ்ட் 8ஆம் தேதி) தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
*
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

