மேலும் அறிய

JEE Main Result 2023: வெளியானது ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள்: 9.4 லட்சம் மாணவர்களின் ரிசல்ட்டை பார்ப்பது எப்படி?

2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் அமர்வு 2-ன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதைப் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். 

2023ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் அமர்வு 2-ன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதைப் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். 

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது.

அதன்படி, நுழைவுத் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) அண்மையில் வெளியிட்டது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மொழிகள் தாண்டி பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

ஜேஇஇ மெயின் முதல் அமர்வின் தேர்வுக்கு 8.60 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 8.22 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். முதல் அமர்வுக்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதத்தில் வெளியாகின. 2ஆவது அமர்வுக்கான தேர்வை எழுத 9.4 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களுக்காக இந்தியா முழுவதும் 330 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 15 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

ஜேஇஇ மெயின் அமர்வு 2-ன் தேர்வு ஏப்ரல் 6, 8, 10, 11, 12, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியானது. ஏப்ரல் 21ஆம் தேதி வரை மாணவர்கள் ஆட்சேபித்த நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதி இறுதி விடைக் குறிப்பு வெளியானது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. 

தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்வது எப்படி?

மாணவர்கள் https://ntaresults.nic.in/resultservices/JEEMAINauth23s2p1 என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாதுகாப்பு பின் ஆகியவற்றை உள்ளிட்டு, தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். 

தர வரிசைப்படி கல்லூரிகள்
 
 75 சதவீத மதிப்பெண்கள் அவசியமில்லை

முன்னதாக ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வை எழுத 12ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்று என்டிஏ அறிவித்திருந்தது.  இந்த நிலையில், குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்ற தகுதியைத் தற்போது என்டிஏ நீக்கியுள்ளது. ’அனைத்துக் கல்வி வாரியங்களிலும் முதல் 20 சதவீத (percentile) மாணவர்கள், 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டியதில்லை’ என்று என்டிஏ தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விவரங்களுக்கு: தொலைபேசி எண்: 011-40759000 

இ- மெயில் முகவரி: jeemain@nta.nic.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Embed widget