மாதம் ரூ.1750 உதவித்தொகை, இலவச பயிற்சி, பாட உபகரணங்கள்; உச்ச வயதில்லை- ஐடிஐ படிக்க பெண்களுக்கு அழைப்பு
தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவிகள் உடனடியாக தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்து சேர்ந்துகொள்ளலாம்.

கிண்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற்பிரிவுகளில் 31.10.2025 வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஐடிஐ பயிற்சி மூலம் பெண்கள் மாதம் ரூ.1,750 உதவித்தொகை பெறுவதோடு, இலவச பயிற்சி பெற முடியும். சீருடை, பாட உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் சேர பெண்களுக்கு உச்ச வயது வரம்பு எதுவும் இல்லை என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
அக்டோபர் 31 வரை மாணவர் சேர்க்கை
சென்னை, கிண்டி மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆண்டுக்கான மாணவியர் நேரடி சேர்க்கை, பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத கீழ்காணும் தொழிற்பிரிவுகளில் 13.10.2025 முதல் 31.10.2025 வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
எனவே, தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவிகள் உடனடியாக தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்து சேர்ந்துகொள்ளலாம்.
என்னென்ன சலுகைகள்?
சேர்க்கை பெறும் மாணவியருக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து மற்றும் இரயில் பயணச் சலுகை, விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா சீருடை, மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- மற்றும் விலையில்லா வரைபட கருவிகள், தகுதியுள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டதின் கீழ் ரூ. 1000/- மாதாந்திர உதவித்தொகை என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.
கல்வி தகுதி
8-ம் வகுப்பு தேர்ச்சி
10-ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி
தேவைப்படும் ஆவணங்கள்
- மாற்றுச் சான்றிதழ்,
- மதிப்பெண் சான்றிதழ்,
- சாதிச்சான்றிதழ்.
- வருமான சான்று
- புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல்.
வேலைவாய்ப்பு எப்படி?
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்தவுடன், தொழிற்பழகுநர் பயிற்சியும், பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்புள்ளதால் மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும் இது தொடர்பான விவரங்களை 044-22510001, 9499055651 தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.






















