மேலும் அறிய

Indian Medicine Admission: சித்தா, யுனானி மருத்துவ படிப்புகள்; மாணவர்‌ சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பப் படிவம்‌ மற்றும்‌ தகவல்‌ தொகுப்பேட்டினை 08.09.2024 முதல்‌ 20.09.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

2024 - 2025 ஆம்‌ கல்வியாண்டிற்கான எம்‌.டி. (சித்தா), எம்‌.டி. (யுனானி) மற்றும்‌ எம்‌.டி. (ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப்‌ படிப்புகளுக்கான மாணவர்‌ சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதி இயக்குநரகம்‌ கூறி உள்ளதாவது:

''தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில்‌ உள்ள எம்‌.டி. (சித்தா) மற்றும்‌ எம்‌.டி. (யுனானி) மருத்துவ முதுநிலை பட்டப்‌ படிப்புகளுக்கும்‌, சுயநிதி ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில்‌_உள்ள எம்‌.டி. (ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப்‌ படிப்புக்கு அரசிற்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள்‌, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்‌ மற்றும்‌ நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்‌ அனைத்திற்கும்‌, 2024-2025 ஆம்‌ கல்வியாண்டிற்கான சேர்க்கை பெற அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்‌ தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

* விண்ணப்பப் படிவம்‌ மற்றும்‌ தகவல்‌ தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்‌ துறையின்‌ வலைதள முகவரி மூலமாக தனித்தனியாக ஒவ்வொரு முதுநிலை பட்டப்‌ படிப்பு/பிரிவிற்கும்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.

விண்ணப்பங்கள்‌ இவ்வியக்குநரகத்திலோ, தேர்வுக்குழு அலுவலகத்திலோ வழங்கப்பட மாட்டாது. மேலும்‌, அடிப்படைத்தகுதி, தரவரிசை, கலந்தாய்வு அட்டவணை மற்றும்‌ பிற விவரங்களையும் அதே வலைதள முகவரியில்‌ தெரிந்துக்கொள்ளலாம்‌.

முக்கியத் தேதிகள்

* விண்ணப்பப் படிவம்‌ மற்றும்‌ தகவல்‌ தொகுப்பேட்டினை 08.09.2024 முதல்‌ 20.09.2024 முடிய மாலை 05.00 மணி வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்‌ தபால்‌ / கூரியர்‌ சேவை வாயிலாக பெறவோ அல்லது நேரில்‌ சமர்ப்பிக்கவோ கடைசி நாள்‌: 20.09.2024 மாலை 05.30 மணி வரை.

* விண்ணப்பதாரர்கள்‌ எம்‌.டி. (ஓமியோபதி) மருத்துவ முதுநிலை பட்டப்‌ படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள்‌, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்‌ மற்றும்‌ நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்‌ ஒவ்வொன்றிற்கும்‌ தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்‌.

* விண்ணப்பப் படிவங்கள்‌ சமர்ப்பிக்கவேண்டிய முகவரி:

"செயலர்‌, தேர்வுக்குழு,

இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதி இயக்குநரகம்‌,

அறிஞர்‌ அண்ணா அரசு மருத்துவமனை வளாகம்‌,

அரும்பாக்கம்‌, சென்னை - 600 106."

* தேசியத்‌ தேர்வு முகமையால்‌ நடத்தப்பெறும்‌ முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும்‌ நுழைவுத்‌ தேர்வு AIAPGET 2024-ல்‌ பெற்ற மதிப்பெண்களின்‌ அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.

நேரடி கலந்தாய்வு மட்டுமே

*விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நேர்முகமாக மட்டுமே நடைபெறும். மேலும்‌ விண்ணப்பதாரர்கள்‌ தங்கள்‌ சொந்த செலவிலேயே வரவேண்டும்‌.

* கலந்தாய்வு தேதி, இடம்‌ மற்றும்‌ அனைத்து விவரங்களும்‌ வலைதள முகவரி மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும்‌.

* கலந்தாய்வு அன்று நேரில்‌ வரத்தவறியவர்கள்‌ தங்களது வாய்ப்பை இழந்துவிடுவார்கள்‌.

* விண்ணப்பதாரர்கள்‌ விண்ணப்பக்‌ கட்டணத்தை எஸ்‌.பி.ஐ. (SBI) e-collect வாயிலாக மட்டுமே செலுத்தவேண்டும்‌.

கடைசி தேதிக்குப்பின்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ எக்காரணம்‌ கொண்டும்‌ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது''.

இவ்வாறு இந்திய மருத்துவம்‌ மற்றும்‌ ஓமியோபதித்துறை இயக்குநர்‌ தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kamala Harris : ”கமலா ஹாரிஸ் சொந்த ஊரில் வழிபாடு” அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மக்கள் பிரார்த்தனை..!
Kamala Harris : ”கமலா ஹாரிஸ் சொந்த ஊரில் வழிபாடு” அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மக்கள் பிரார்த்தனை..!
”திருமாவையும் விஜயையும் கைக்கோர்க்க வைக்கும் ஆதவ் அர்ஜூனா” அதிருப்தியில் திமுக..?
”திருமாவையும் விஜயையும் கைக்கோர்க்க வைக்கும் ஆதவ் அர்ஜூனா” அதிருப்தியில் திமுக..?
School Education: முதல்வர் தலைமையில் நவ.8 பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்; புதிய திட்டங்கள் உண்டா?
School Education: முதல்வர் தலைமையில் நவ.8 பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்; புதிய திட்டங்கள் உண்டா?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kamala Harris : ”கமலா ஹாரிஸ் சொந்த ஊரில் வழிபாடு” அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மக்கள் பிரார்த்தனை..!
Kamala Harris : ”கமலா ஹாரிஸ் சொந்த ஊரில் வழிபாடு” அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற மக்கள் பிரார்த்தனை..!
”திருமாவையும் விஜயையும் கைக்கோர்க்க வைக்கும் ஆதவ் அர்ஜூனா” அதிருப்தியில் திமுக..?
”திருமாவையும் விஜயையும் கைக்கோர்க்க வைக்கும் ஆதவ் அர்ஜூனா” அதிருப்தியில் திமுக..?
School Education: முதல்வர் தலைமையில் நவ.8 பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்; புதிய திட்டங்கள் உண்டா?
School Education: முதல்வர் தலைமையில் நவ.8 பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக் கூட்டம்; புதிய திட்டங்கள் உண்டா?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு - வெற்றி யார் வசம்?
TVK On CM Stalin: விஜயை ஒருமையில் சாடிய சிஎம் ஸ்டாலின், ஓப்பனாக அடித்து பேசிய தவெக - திமுகவிற்கு சவால்
TVK On CM Stalin: விஜயை ஒருமையில் சாடிய சிஎம் ஸ்டாலின், ஓப்பனாக அடித்து பேசிய தவெக - திமுகவிற்கு சவால்
Lokesh Kanagaraj : ஒரே படத்தில் ரஜினி கமல்...நிறைவேறாமல் போன லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்
Lokesh Kanagaraj : ஒரே படத்தில் ரஜினி கமல்...நிறைவேறாமல் போன லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்
நெல்லையில் சாதி கொடூரம்: சிறுவனை வீடுபுகுந்து வெட்டிய கும்பல்? களத்தில் இறங்கிய காவல்துறை .! 
நெல்லையில் சாதி கொடூரம்: சிறுவனை வீடுபுகுந்து வெட்டிய கும்பல்? களத்தில் இறங்கிய காவல்துறை .! 
US Election 2024: டிரம்ப் Vs கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்? சிக்கல் என்ன?
US Election 2024: டிரம்ப் Vs கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்? சிக்கல் என்ன?
Embed widget