மேலும் அறிய

IIT Madras: அம்மாடியோவ்.. ஒரே ஆண்டில் ரூ.231 கோடி நிதி திரட்டி ஐஐடி சென்னை அசத்தல்

முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட்டுகள், நன்கொடையாளர்கள் மூலம் சென்னை ஐஐடி, முன்னெப்போதையும் விட அதிக அளவாக 2022-23ம் ஆண்டில் ரூ.231 கோடி நிதி திரட்டியுள்ளது.

முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட்டுகள், நன்கொடையாளர்கள் மூலம் சென்னை ஐஐடி, முன்னெப்போதையும் விட அதிக அளவாக 2022-23ம் ஆண்டில் ரூ.231 கோடி நிதி திரட்டியுள்ளது. சமூகம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த ஒரே நிதியாண்டில் திரட்டப்பட்ட அதிகபட்சத் தொகை இதுவாகும்.

நிதி திரட்டலைப் பொறுத்தவரை 2022-ல் திரட்டப்பட்ட ரூ.131 கோடியுடன் ஒப்பிடுகையில் 76 சதவீத வளர்ச்சியை ஐஐடி சென்னை பதிவு செய்துள்ளது. ரூ.1 கோடிக்கு மேல் இக்கல்வி நிறுவனத்திற்கு நிதி வழங்கிய நன்கொடையாளர்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 64 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு திரட்டப்பட்ட மொத்த நிதியின் வளர்ச்சி விகிதம், கடந்த 10 ஆண்டுகளில் 45 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தத் தொகை அனைத்தும் முன்னாள் மாணவர்களிடம் இருந்தும், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்தும் பெறப்பட்டவையாகும். இதுதவிர உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம், மானியங்கள் ஆகியவற்றின் வாயிலாகவும் நிதி திரட்டப்பட்டது.

எதற்காக இந்தத் தொகை?

இக்கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இந்தியா மற்றும் உலகளவில் தனிப்பட்ட நன்கொடையாளர்கள் மட்டும் ஏறத்தாழ ரூ.96 கோடி அளவுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, குறிப்பிட்ட பொருள் குறித்த ஆய்வுக்கான ஆராய்ச்சிப் பேராசிரியர்களை நியமித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் டீன் (முன்னாள் மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் உறவுகள்) பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா கூறியதாவது:

’’ஒவ்வோர் ஆண்டும் முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் அளித்து வரும் ஆதரவு சர்வதேச அரங்கில் நமது வெற்றிக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 56 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 40 புதிய நிறுவனங்கள் கூட்டு முயற்சியில் கைகோர்த்துள்ளன. 

சுகாதாரம், பருவநிலை மாற்றம், ஆற்றல், திறன் மேம்பாடு, விவசாயம் போன்ற சமூகம் தொடர்பான துறைகளில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தவும், வரிசைப்படுத்தவும் கவனம் செலுத்தும் வகையில் எங்களது பயனர்கள் பல்துறைசார் சிறப்பு மையங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகின்றனர். உதவித்தொகை மற்றும் ஃபெல்லோஷிப் மூலம் மாணவர்களுக்குத் தேவைப்படும் நிதியுதவியையும் வழங்குகின்றனர்.

சென்னை ஐஐடியுடன் தொடர்புடைய உலகத்தரம் வாய்ந்த ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முன்னாள் மாணவர்களுடன் பரந்த அளவில் பணியாற்றி வருகிறோம்’’. 

இவ்வாறு பேராசிரியர் மகேஷ் பஞ்சக்நுலா தெரிவித்தார்.

ஐஐடி கல்வி நிறுவனத்தின் 2023- 24ஆம் நிதியாண்டிற்கான முக்கிய நிதி திரட்டும் இலக்குகளாக, முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை மேலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும், அமெரிக்காவிலும் முன்னாள் மாணவர்களிடையே நிதி திரட்டும் குழுவை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐஐடி தெரிவித்துள்ளது. 

நம் பள்ளி நம் பெருமை

தமிழ்நாட்டில் நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் அமைப்பின்கீழ், அரசுப் பள்ளிகளில் படித்தவ மாணவர்களிடம் தன்னார்வ நிதி பெறப்படுகிறது. இதை இன்னும் மேம்படுத்தினால், அரசுப் பள்ளிகள் அசத்தல் பள்ளிகளாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget