IIT JEE Advance Results: ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியானது - டெல்லியைச் சேர்ந்தவர் முதலிடம்..!
இந்த ஆண்டு, டெல்லியைச் சேர்ந்த மிருதுல் அகர்வால் ஜேஇஇ 2021 தேர்வில் முதலிடம் பிடித்துள்ளார்.
ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. டெல்லியைச் சேர்ந்த மாணவர் மிருதுல் அகர்வால் ஐஐடி நுழைவுத் தேர்வில் முதல் இடம்பிடித்துள்ளார்.
கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) இன்று ஜேஇஇ நுழைவுத் தேர்வு முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வின் முடிவுகளை jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம். நாடு முழுவதும் 1,41,699 லட்சம் பேர் எழுதிய ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் 41,862 பேர் தகுதி பெற்றுள்ளனர். 360 மதிப்பெண்களுக்கு 348 மதிப்பெண் எடுத்து டெல்லி மாணவர் மிருதுல் அகர்வால் முதலிடம் பிடித்துள்ளார். நாடு முழுவதும் 23 ஐஐடிகளில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான தேர்வு கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Delhi boy Mridul Agarwal tops IIT entrance exam JEE-Advanced
— Press Trust of India (@PTI_News) October 15, 2021
அக்டோபர் 3, 2021 அன்று ஜேஇஇ மேம்பட்ட 2021 தேர்வு நடத்த திட்டமிடப்பட்டது.
ஜோசா கவுன்சிலிங்கின் தொடக்கத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களை பதிவு செய்ய வேண்டும். அவர்கள் பதிவு செய்யாவிட்டால், அவர்கள் கவுன்சிலிங் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்கள், எனவே, அவர்கள் JIE மூலம் IIT, NIT களில் சேர்க்கை பெறமாட்டார்கள். பதிவு செயல்முறை 2021 அக்டோபர் 16 முதல் 25 வரை ஆரம்பத்தில் மட்டுமே நடைபெறும்.
JEE (Advanced) 2021| Mridul Agarwal of IIT Delhi scores top rank; obtained 348 marks out of 360 marks. Kavya Chopra of IIT Delhi zone has topped in the female category with CRL 98. She obtained 286
— ANI (@ANI) October 15, 2021
marks out of 360.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்