மேலும் அறிய

Scholarship: மிஸ் பண்ணிடாதீங்க.! மாணவர்களுக்கு ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கும் தமிழ்நாடு அரசு! எப்படி பெறுவது?

TN Scholarship: தமிழ்நாடு அரசானது, வருடத்திற்கு 2 லட்சம் ரூபாய் கல்வித் உதவித் தொகையை வழங்குகிறது.இந்த திட்டம் குறித்தும், விண்ணப்பிப்பது குறித்தும், தகுதி குறித்தும் தெரிந்து கொள்வோம். 

தமிழ்நாட்டில், பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் , மதிய உணவுத் திட்டம் , இலவச பேருந்து பயணம் ( பஸ் பாஸ் ) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோன்று, கல்லூரி மாணவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய், மாதந்தோறும் வழங்கப்படுகிறது. 

கல்வி உதவித்தொகை:

இந்நிலையில், மத்திய அரசு கல்வி நிலையங்களான ஐஐடி, ஐஐஎம், என்.ஐ.டி ஆகிய கல்வி நிலையங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் ( BC,MBC,DNC ) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தமிழக மாணவர்களுக்கு ரூ, 2 லட்சம் வரையிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற, குடும்ப வருமானம், வருடத்திற்கு 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   
 
இது தொடர்பாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது , மாணவர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தருணத்தில், 2024-25ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள், அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதளத்திலோ அல்லது கீழ்கண்ட முகவரியிலுள்ள அலுவலகத்தில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம்,  சென்னை-5 அல்லது சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திலோ சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பத்தை பெற்று, தேவையான தகவல்களை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

ஆணையர்,
பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம்.
எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5.
தொலைபேசி எண்: 044-29515942
மின்னஞ்சல் முகவரி - tngovtiitscholarship@gmail.com
 
ஏதேனும், விண்ணப்பம் தொடர்பான ஏதேனும் சந்தேகம் எழுந்தால், உதவி எண்களை அழைத்து தெளிவு பெற்றுக் கொள்ளவும். அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளவும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Embed widget