ICAI CA 2025 Results: சிஏ அடிப்படை, இடைநிலை, இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? காண்பது எப்படி?
ICAI CA September 2025 Result: தேர்வு முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் ஐசிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் icai.nic.in என்ற இணைய முகவரியில் தங்கள் முடிவுகளைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஐசிஏஐ எனப்படும் இந்திய பட்டயக் கணக்கறிஞர் நிறுவனம் (ICAI) கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பட்டயக் கணக்கறிஞர் (CA) இறுதி, இடைநிலை மற்றும் ஃபவுண்டேஷன் (Foundation) தேர்வுகளின் முடிவுகளை நவம்பர் 3, 2025 அன்று வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய தேதிகள் மற்றும் நேரம்
- இறுதி மற்றும் இடைநிலை தேர்வு முடிவுகள்: நவம்பர் 3, 2025 அன்று பிற்பகல் 2 மணிக்குள் வெளியிடப்படும்.
- ஃபவுண்டேஷன் தேர்வு முடிவுகள்: நவம்பர் 3, 2025 அன்று மாலை 5 மணிக்குள் அறிவிக்கப்படும்.
தேர்வு முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் ஐசிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் icai.nic.in என்ற இணைய முகவரியில் தங்கள் முடிவுகளைச் சரிபார்த்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முடிவுகளைப் பார்ப்பதற்கு, மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் ரோல் எண்ணை உள்ளிட வேண்டும்.
ICAI CA செப்டம்பர் 2025 முடிவுகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஐசிஏஐ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கமான https://icai.nic.in/caresult/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில், உங்கள் தேர்வு முடிவுகளைச் சரிபார்க்க முறையே ஃபவுண்டேஷன் (Foundation) / இடைநிலை (Intermediate) / இறுதி (Final) என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் ரோல் எண் மற்றும் பதிவு எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் தேர்வு முடிவு திரையில் தோன்றும்.
- எதிர்கால தேவைக்காக தேர்வு முடிவைப் பதிவிறக்கம் செய்து சேமித்துக் கொள்ளவும்.
தேர்ச்சி விதிமுறைகள்
70 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஒட்டுமொத்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் 'சிறப்புத் தகுதியுடன் தேர்ச்சி' (Pass with Distinction) பெறுவார்கள். ஏதேனும் ஒரு குழுவில் தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த தேர்வுச் சுழற்சியில் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இந்தத் தேர்வு முடிவுகள், ஐசிஏஐ வளாக வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கத் திட்டமிடும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ICAI மறு மதிப்பீடு மற்றும் சரிபார்ப்பு செயல்முறையைத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் விவரங்களுக்கு: https://icai.nic.in/






















