IBPS PO Prelims Result 2023: வங்கி அதிகாரிகளுக்கான ஐபிபிஎஸ் தேர்வு; முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
வங்கி புரொபேஷனரி அதிகாரி (Probationary Officer) பணிக்காக நடத்தப்பட்ட ஐபிபிஎஸ் முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.
வங்கி புரொபேஷனரி அதிகாரி (Probationary Officer) பணிக்காக நடத்தப்பட்ட ஐபிபிஎஸ் முதல்நிலைத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதைத் தேர்வர்கள் எப்படிக் காண்பது என்று பார்க்கலாம்.
ஐபிபிஎஸ் என்று அழைக்கப்படும் வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (Institute of Banking Personnel Selection) மூலம் நாடு முழுவதும் வங்கிகளுக்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நிலையில் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள்/ மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்கள் (Probationary Officer/ Management Trainee posts) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் (Institute of Banking Personnel Selection) வெளியிட்டது.
இந்தப் பொது வேலைவாய்ப்பில் பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்திய வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந் வங்கி, யு.சி,ஓ. வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் இந்த பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்றன. இதற்கு தகுதியான நபர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல்நிலை தேர்வு செப்டம்பர் 23 -30 மற்றும் அக்டோபர் 01 வரையில் நடைபெற்றது. இந்த நிலையில், தேர்வின் முடிவுகள் இன்று (அக்.18) வெளியாகி உள்ளன. இதைத் தேர்வர்கள் எப்படிக் காண்பது என்று பார்க்கலாம்.
* தேர்வர்கள் ibps.in என்ற இணைய பக்கத்திஐ க்ளிக் செய்து பார்க்கவும்.
* அதில் தோன்றும் Common Recruitment Process for Probationary Officer/Managment Trainee-XIII என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* அல்லது https://ibpsonline.ibps.in/crppo13jun23/resta_oct23/login.php?appid=5fed760315a3f96afcc2ebf7ca614fa7 என்ற இணைப்பை தேர்வர்கள் க்ளிக் செய்யலாம்.
* இதில் லாகின் பகுதியில் தோன்றும் பதிவு எண்ணை உள்ளிட்டு, பாஸ்வேர்டைப் பதிவு செய்யவும்.
* லாகின் செய்து தேர்வர்கள் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
அடுத்தடுத்த தேர்வுகள் எப்போது?
முதன்மைத் தேர்வானது 2023 நவம்பர் மாதத்திலும், நேர்காணலுக்கான அழைப்பு 2024ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://www.ibps.in/wp-content/uploads/Detailed_Notification_CRP_PO_XIII.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
இதையும் வாசிக்கலாம்: APAAR: ”Pre KG முதல் PhD வரை” - ஆதார் போல் வரும் அபார்: மாணவர்களுக்கும் ’ஒரே’ திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு!