School Leave: கோவை வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..! இன்று எங்கெல்லாம் மழை..?
கனமழை காரணமாக கோவை வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக கோவை வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கோவையை தொடர்ந்து கேரளாவிலும் இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கேரளாவில் உள்ள கோட்டயம், கண்ணூர், எர்ணாகுளம், காசர்கோடி, திருச்சூர், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். விடுமுறை அறிவிக்கப்பட்ட தினத்தை கணக்கில் கொண்டு மற்றொரு நாள் வேலை நாளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அறிவித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்வரத்து அதிகரிப்பு:
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர் மழை பெய்து வருவதால் பிரதான அணையான உச்ச நீர்மட்டம் 143 அடி கொண்ட பாபநாசம் காரையார் அணை நேற்று ஒரே நாளில் சுமார் 3 அடி உயர்ந்த நிலையில் இன்று 44.2 அடியில் இருந்து சுமார் 4 அடி உயர்ந்து 48.3 அடியாக உயரந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 1,644.83 கன அடி காணப்பட்ட நிலையில் இன்று 2,277.17 கன அடியாக அதிகரிப்பு
மேலும் அருகேயுள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் சுமார் 9 அடி உயர்ந்த நிலையில் இன்று மேலும் சுமார் 8 அடி உயர்ந்து 73.46 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ராமநதி அணை மற்றும் கடனாநதி அணை நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இன்று எங்கெல்லாம் மழை..?
மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னதுடன் கூடிய லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நிருநெல்வேலி மற்றும் கண்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
06.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
07.07.2023 மற்றும் 08.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்