TN Arts College Admission: அரசு கலைக்கல்லூரிகளில் சேர வேண்டுமா?- இந்த நாட்களில் விண்ணப்பிக்கலாம்; அமைச்சர் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மே 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு மே 8ஆம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்க உள்ளது. இதற்கு மாணவர்கள் https://tngasa.org/ மற்றும் https://tngasa.in/என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மே 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் அனைத்து மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டண விவரம்
ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும்:
விண்ணப்பக் கட்டணம் - ரூ.48/-
பதிவுக் கட்டணம் - ரூ.2/-
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு- விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை
பதிவுக் கட்டணம் - ரூ.2/- மட்டும்
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Credit Card/ Debit Card/ Net Banking மூலம் இணையதள வாயிலாகச் செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai - 6” என்ற பெயரில் மே 8 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகச் செலுத்தலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள் - 08.08.2023
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் - 19.06.2023
கூடுதல் தகவல்களுக்கு: தொடர்பு எண் : 1800 426 0110
இதையும் வாசிக்கலாம்: TN 12th Result 2023: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள், நேரம் இதுதான்: 5 வழிகளில் பார்க்கலாம் - எப்படி?