மேலும் அறிய

ஒரு மாணவர்கூட இல்லாத  311 பள்ளிகள்; வெகுவாக சரியும் அரசுப்பள்ளி சேர்க்கை- கல்வித்துறை என்ன செய்ய வேண்டும்?

வெகுவாக சரியும் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை; கல்வித்துறை என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாடு முழுவதுமுள்ள கல்வித்துறை அதிகாரிகள்  ஆய்வினை மேற்கொண்டு மாணவர்கள் இல்லாத பள்ளிகள், குறைவாக உள்ள பள்ளிகள்,  ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகள், பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து கல்வித்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அரசுக்கு அறிக்கை அனுப்பச் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவுக்கான காரணங்கள் கண்டறிந்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்

இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கை, உள் கட்டமைப்புகள் போன்றவற்றை கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யு.டி.ஐ.எஸ்.இ) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

குறையும் மாணவர் சேர்க்கை

2024 - 25 ஆண்டுக்கான அறிக்கையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதலாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என ஒட்டுமொத்தமாக 9,27,185 மாணவர்கள் முதலாம் வகுப்பில்  சேர்ந்துள்ள நிலையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில்  3,61,940, பிற தனியார் பள்ளிகளில் 5,65,243 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

ஒரு மாணவர் கூட இல்லாத  311 பள்ளிகள்

அரசு பள்ளிகளை விட 2 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த 2020 - 21ல் அரசு மற்றும் உதவி பெறும்  பள்ளிகளில் சேர்க்கை 4,15,000  அளவில் இருந்தது. 2024-25ல் 3,60,000 ஆக குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஒப்பிடுகையில் முதலாம் வகுப்பிலான மாணவர் சேர்க்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக  குறைந்து வருகிறது. இந்த கல்வி ஆண்டில் 208 அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த  1,204 பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை என கூறப்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கூட இல்லாத  311 பள்ளிகள் உள்ளன. தொடக்கக் கல்வியின் நிலை இப்படி உள்ளது. 

கொரோனா காலத்தில் பலர் அரசுஒ பள்ளிகளில் சேர்த்தனர். அதன்படி 2022-23ல் அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்தது.  அப்படி சேர்ந்த மாணவர்கள் மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு ஏன் சென்றார்கள்? காரணம் அரசு பள்ளிகளில் போதிய கட்டிட வசதிகள், கழிப்பறை வசதிகள், பாதுகாப்பு இல்லாதது, போதுமான ஆசிரியர்கள் இல்லாமை போன்றவைகளால்தான்.

தொடக்கக் கல்வியில்  சேர்க்கை குறைவு என்பதும், அதனால் பள்ளிகளை மூடுவது என்பதும் தொடக்க கல்வியை மட்டும் பாதிக்காது. பள்ளி பருவ கல்வியையே பாதிக்கும். இது ஏழை, எளிய பிள்ளைகளின் கல்விக்கு பெரும் சவாலாக அமையும்.

தமிழ்நாடு முழுவதும் ஆய்வு

எனவே, தமிழ்நாடு முழுவதுமுள்ள கல்வித்துறை அதிகாரிகள்  ஆய்வினை மேற்கொண்டு மாணவர்கள் இல்லாத பள்ளிகள், குறைவாக உள்ள பள்ளிகள்,  ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகள், பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து கல்வித்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அரசுக்கு அறிக்கை அனுப்பச் செய்ய வேண்டும்.  

அதனடிப்படையில் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவது,  குறைவாக மாணவர்கள்  உள்ள பள்ளிகளை ஒன்றிணைப்பது, உபரியாக உள்ள ஆசிரியர்களை பற்றாக்குறையுள்ள  பள்ளிகளுக்கு மாற்றுவது போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். மேலும் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு அனைத்து உயர் படிப்புகள் மற்றும் அரசு வேலைகளில் முன்னுரிமை சதவீதத்தையும் அரசு அதிகரித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

’’S.I.R. முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும், இல்லைன்னா..’’ முதல்வர் எச்சரிக்கை!
’’S.I.R. முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும், இல்லைன்னா..’’ முதல்வர் எச்சரிக்கை!
TVM Karthigai Deepam Spl. Buses: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; 4,764 சிறப்புப் பேருந்துகள் - முழு விவரம் இதோ
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; 4,764 சிறப்புப் பேருந்துகள் - முழு விவரம் இதோ
Sengottaiyan: ஜெ. இருக்கும்போதே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்.. திண்டுக்கல் சீனிவாசன் பகீர்
Sengottaiyan: ஜெ. இருக்கும்போதே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்.. திண்டுக்கல் சீனிவாசன் பகீர்
CMS 03 Satellite: இன்னும் சில மணி நேரத்தில் விண்ணில் பாயவுள்ள CMS 03 செயற்கைக்கோள்; இது இவ்வளவு சிறப்பானதா.?
இன்னும் சில மணி நேரத்தில் விண்ணில் பாயவுள்ள CMS 03 செயற்கைக்கோள்; இது இவ்வளவு சிறப்பானதா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gingee Masthan| கோரிக்கை வைத்த நரிக்குறவர்கள்பாதியில் எழுந்து சென்றமஸ்தான் அதிகாரிகளுடன் வாக்குவாதம்
Women forced to prove Menstruation|’’PERIODS-னு ஏமாத்துறீங்களா?PHOTOகாட்டுங்க’’அத்துமீறிய அதிகாரிகள்
கோயிலுக்கு வந்த பக்தர்கள் 9 பேர் நெரிசலில் உயிரிழப்பு நெஞ்சை உருக்கும் காட்சி | Andhra Temple Stampade
OPERATION முக்குலத்தோர்! எடப்பாடி புது வியூகம்! தேர்தல் அறிக்கையில் சம்பவம்
அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’S.I.R. முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும், இல்லைன்னா..’’ முதல்வர் எச்சரிக்கை!
’’S.I.R. முயற்சிகளை தேர்தல் ஆணையம் நிறுத்திவைக்க வேண்டும், இல்லைன்னா..’’ முதல்வர் எச்சரிக்கை!
TVM Karthigai Deepam Spl. Buses: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; 4,764 சிறப்புப் பேருந்துகள் - முழு விவரம் இதோ
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; 4,764 சிறப்புப் பேருந்துகள் - முழு விவரம் இதோ
Sengottaiyan: ஜெ. இருக்கும்போதே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்.. திண்டுக்கல் சீனிவாசன் பகீர்
Sengottaiyan: ஜெ. இருக்கும்போதே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டவர் செங்கோட்டையன்.. திண்டுக்கல் சீனிவாசன் பகீர்
CMS 03 Satellite: இன்னும் சில மணி நேரத்தில் விண்ணில் பாயவுள்ள CMS 03 செயற்கைக்கோள்; இது இவ்வளவு சிறப்பானதா.?
இன்னும் சில மணி நேரத்தில் விண்ணில் பாயவுள்ள CMS 03 செயற்கைக்கோள்; இது இவ்வளவு சிறப்பானதா.?
Exam tips: தேர்வு பயம் வேண்டாம்; மாணவர்கள் செய்யும் பொதுவான 7 தவறுகள்- தவிர்ப்பது எப்படி? டிப்ஸ்!
Exam tips: தேர்வு பயம் வேண்டாம்; மாணவர்கள் செய்யும் பொதுவான 7 தவறுகள்- தவிர்ப்பது எப்படி? டிப்ஸ்!
Tesla Flying Car: இனி கார்ல பறக்கலாம்; அட நிஜமாவேதாங்க.! இந்த ஆண்டு இறுதியில் டெமோ; எலானின் எக்சைட்டிங் அறிவிப்பு
இனி கார்ல பறக்கலாம்; அட நிஜமாவேதாங்க.! இந்த ஆண்டு இறுதியில் டெமோ; எலானின் எக்சைட்டிங் அறிவிப்பு
TVK: விஜய்க்கே தெரியாமல் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை.. யாருடன் யார் நடத்தியது?
TVK: விஜய்க்கே தெரியாமல் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை.. யாருடன் யார் நடத்தியது?
வரப்போது Skoda Kushaq Facelift.. கிரெட்டா, செல்டோஸ், டைகன்-க்கு சவால் - என்ன சிறப்பம்சங்கள்?
வரப்போது Skoda Kushaq Facelift.. கிரெட்டா, செல்டோஸ், டைகன்-க்கு சவால் - என்ன சிறப்பம்சங்கள்?
Embed widget