இன்ஜினியரிங் படிக்க போறீங்களா ? கொட்டிக்கிடக்கும் ஸ்காலர்ஷிப் ! மிஸ் பண்ணிடாதீங்க
Engineering scholarship: இன்ஜினியர் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு வகையான, உதவி தொகைகள் வழங்கப்படுகின்றன. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.

பன்னிரண்டாம் வகுப்பு படித்த பெரும்பாலான மாணவர்களின் முதல் சாய்ஸ் இன்ஜினியரிங் கல்லூரியாக தான் இருக்கிறது. குறிப்பாக இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என ஆசைப்படுபவர்கள், ஐ.ஐ.டியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது அவர்களுடைய கனவாகவும் இருக்கிறது. ஐஐடியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்றால் அதிகளவு செலவாகும் என்ற கவலையும் மாணவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை ஊக்க தொகைகளில், ஐஐடிகள் வழங்குவது பற்றி உங்களுக்கு தெரியுமா ?. அதுகுறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
ஜே.இ.இ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தற்போது தேர்வு முடிவுகளின் அடிப்படையில், ஐ.ஐ.டியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் இருக்கும் மாணவர்கள் விரும்பும், கல்லூரியாக மெட்ராஸ் ஐஐடி கல்லூரி திகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு என்.ஐ.ஆர்.எஃப் பொறியியல் தரவரிசையில் முதலிடத்தில் மெட்ராஸ் ஐ.ஐ.டி உள்ளது.
ஊக்கத்தொகை விவரம் :
பெற்றோரின் ஆண்டு வருமானம் 4, 50,000 க்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு, 67 சதவீத கல்வி கட்டணம் விளக்கு தொடர்ந்து ஒவ்வொரு செமஸ்டருக்கும் குறைந்தது 5.0 ஜி.பி.ஏ இருத்தல் அவசியம்.
மாணவர்களுக்கு இலவச மெஸ், மாதத்திற்கு 250 ரூபாய் பாக்கெட் அளவென்ஸ், கல்வி கட்டண விளக்கு வழங்கப்படுகிறது. இச்சலுகை எஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்காக வழங்கப்படுகிறது. பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 4,50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கிரிஷ் ரெட்டி ஊக்கத்தொகை மூலம் மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. விருது வழங்க மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தொடர்ச்சியாக உதவித்தொகை பெற முந்தைய செமஸ்டர் 8.0 GPA தேவைப்படுகிறது. குடும்ப வருமானம் 5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இந்திய மகளிர் சங்க பான் உதவித்தொகை குடும்ப வருமானம் 5 லட்சத்திற்கும் மிகாமல் இருப்பவர்களுக்கு, 12 மாதங்களுக்கு மாதம் 1250 ரூபாய் வழங்கப்படும்.
இதேபோன்று ஐஐடியில் பல்வேறு உதவி தொகைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.





















