Engineering Seats: வெளியான சூப்பர் தகவல்; பொறியியல் படிப்புகளுக்கு 20 ஆயிரம் இடங்கள் அதிகரிப்பு!
கணினி அறிவியல் சார்ந்த 15 பாடப்பிரிவுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 2024-25ம் கல்வியாண்டில், பொறியியல் படிப்புகளுக்கு கூடுதலாக 20,040 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாகத் தகவல் உள்ளது.
பாடங்களும் சேர்ப்பு
அதேபோல இளநிலை பொறியியலில் புதிதாக 8 பாடங்களும், முதுநிலை பொறியியலில் புதிதாக 10 பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ட்ரெண்டிங் படிப்புகளாக மாறி வரும் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட கணினி அறிவியல் சார்ந்த 15 பாடப்பிரிவுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக் கழகம். பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக் கழகங்களில் அண்ணா பல்கலைக் கழகம். இந்தப் பல்கலைக் கழகத்திற்கு கீழ் வரும் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளை படித்து வருகின்றனர்.
இங்கு கடந்த கல்வியாண்டில் பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், 2024-25ம் கல்வியாண்டில், பொறியியல் படிப்புகளுக்கு கூடுதலாக 20,040 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாகத் தகவல் உள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.