Engineering Counselling 2022: பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி; எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
ஜூலை 22-ஆம் தேதி சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் இருந்து 5 நாட்களுக்கு, அதாவது ஜூலை 27 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவுக்கு ஜூன் 20 முதல் ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பித்து வந்த நிலையில், விண்ணப்பிக்க இன்றே (ஜூலை 27) கடைசித் தேதி ஆகும்.
கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் இருந்த நிலையில், தற்போது 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க / அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் ஜூலை 19 ஆக இருந்தது. எனினும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகத் தாமதமாகின. இதனால், விண்ணப்பிக்கக் கடைசித் தேதி கால அவகாசம் இல்லாமல் நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையே ஜூலை 22ஆம் தேதி சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் இருந்து 5 நாட்களுக்கு, அதாவது ஜூலை 27 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
சேவை மையம் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு நாட்கள் - 20.07.2022 முதல் 31.07.2022 வரை
தர வரிசைப் பட்டியல் வெளியீடு - 08.08.2022
சேவை மையம் வாயிலாகக் குறைகளை நிவர்த்தி செய்தல்- 09.08.2022 முதல் 14.08.2022
சிறப்புக் கலந்தாய்வு (இணையதள வாயிலாக)
* மாற்றுத்திறனாளி
* முன்னாள் படை வீரர்
* விளையாட்டு
ஆகிய 3 பிரிவினருக்கும் 16.08.2022 முதல் 18.08.2022 வரை கலந்தாய்வு
பொதுக் கலந்தாய்வு (இணையதள வாயிலாக)
* பொதுக்கல்வி
* தொழில்முறைக் கல்வி
* அரசுப் பள்ளி 7.5% ஒதுக்கீடு
ஆகிய 3 பிரிவினருக்கும் 22.08.2022 முதல் 14.10.2022 வரை கலந்தாய்வு
துணைக் கலந்தாய்வு (இணையதள வாயிலாக) - 15.10.2022 & 16.10.2022
எஸ்.சி.ஏ காலியிடம் எஸ்.சி. வகுப்பிற்கான கலந்தாய்வு (இணையதள வாயிலாக) - 17.10.2022 & 18.10.2022
கலந்தாய்வு இறுதி நாள் - 18.10.2022 என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். இதற்கிடையே விண்ணப்பிக்கக் கடைசித் தேதி நீட்டிக்கப்பட்ட நிலையில், பிற தேதிகளும் தள்ளிப்போக உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்கள் https://www.tneaonline.org/user/register என்ற இணையப் பக்கத்துக்குச் சென்று, போதிய விவரங்களைப் பூர்த்தி செய்து, பின்னர் விண்ணப்பிக்கலாம். அதேபோல விண்ணப்பப் பதிவு செய்து கட்டணம் செலுத்தாமல், சான்றிதழ் பதிவேற்றம் செய்யாதவர்களுக்காக மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்