மேலும் அறிய

E-mail ID For 12th Students: பள்ளி மாணவர்களுக்கு இ- மெயில் கட்டாயம்: கல்வித்துறை உத்தரவு- என்ன காரணம்?

அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 12ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல்‌ முகவரி தொடங்கப்பட வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 12ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு மின்னஞ்சல்‌ முகவரி தொடங்கப்பட வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

’’2023 - 24 ஆம்‌ கல்வியாண்டில்‌ நான்‌ முதல்வன்‌ திட்டம்‌ சார்ந்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில்‌ 12ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி கல்லூரி சேர்க்கைக்கான அனைத்து விண்ணப்பங்களும்‌ இணையதளம்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்‌. மேலும்‌ அவ்வாறு விண்ணப்பிக்கும்‌ நிலையில்‌ பெரும்பாலான கல்லூரிகள்‌, கல்லூரி சேர்க்கை சார்ந்த தகவல்களை மின்னஞ்சல்‌ வாயிலாகவே மாணவர்களுக்கு வழங்குகின்றன. எனவே, ஒவ்வொரு மாணவருக்கும்‌ மின்னஞ்சல்‌ முகவரி இருத்தல்‌ என்பது கட்டாயமான ஒன்றாகும்‌.

மின்னஞ்சல்‌ 

இந்த ஆண்டு 12ஆம்‌ வகுப்பு பயிலும்‌ ஒவ்வொரு மாணவருக்கும்‌ ஒரு மின்னஞ்சல்‌ முகவரியினை வகுப்பு ஆசிரியர்கள்‌ உதவியுடன்‌, அவர்களாகவே உருவாக்க தக்க வழிகாட்டிட அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளி தலைமையாசிரியர்களும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. மாணவர்களுக்கான மின்னஞ்சல்‌ உருவாக்குதல்‌ குறித்த விளக்கக்‌ காணொளி லிங்க்‌ மூலம்‌ வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு மின்னஞ்சல்‌ தொடங்க கற்பிக்கும்‌ போது பின்வரும்‌ கூடுதல்‌ விவரங்களையும்‌ வழங்குதல்‌ வேண்டும்‌.

மாணவர்களுக்கு புதிதாக தொடங்கப்பட்ட மின்னஞ்சல்‌ முகவரியினை EMIS மாணவர்‌ தகவல்‌ பதிவேட்டில்‌ பதிவு செய்திடல்‌ வேண்‌டும்‌.

மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மின்னஞ்சலை உருவாக்கிய பின்‌ மாணவர்கள்‌ மின்னஞ்சலுக்குள்‌ எவ்வாறு உள்நுழைவது, மற்றவர்களுக்கு மின்னஞ்சல்‌ அனுப்புவது, பெறப்பட்ட மின்னஞ்சலை எவ்வாறு திறந்து படிப்பது, மின்னஞ்சலில்‌ இருந்து எவ்வாறு வெளியேறுவது என்பது குறித்து மாணவர்களுக்கு அனைத்து ஆசிரியர்களும்‌ கற்பித்தல்‌ வேண்டும்‌.

அவ்வாறு உருவாக்கப்படும்‌ மின்னஞ்சலின்‌ கடவுச்சொல்லை (PASS WORD) மாணவர்கள்‌ நினைவில்‌ வைத்திருத்தல்‌ வேண்டும்‌. மற்றவர்களுக்கு பகிரக்‌ கூடாது. இதன்‌ மூலம்‌ மற்றவர்கள்‌ தங்கள்‌ மின்னஞ்சல்‌ கணக்கை பயன்படுத்துதலைத் தவிர்க்கலாம்‌. இந்த விவரங்களை மாணவர்களுக்கு வழங்கி ஆசிரியர்கள்‌
வழிகாட்டிடல்‌ வேண்டும்‌.

ஆசிரியர்களின்‌ வழிகாட்டுதல்‌ மூலம்‌ மாணவர்கள்‌ புதியதாக உருவாக்கப்பட்ட மின்னஞ்சல்‌ முகவரியிலிருந்து cgtnss@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு நான்‌ புதிய மின்னஞ்சல்‌ முகவரியினை பெற்றேன்‌ என்றும்‌ உயர்கல்வியில்‌ மாணவர்களின்‌ இலக்கு என்னவாக இருக்கின்றது என்கின்ற விவரத்தினை மாணவர்கள்‌ மின்னஞ்சல்‌ வாயிலாக அனுப்புவதற்கு வழிகாட்டுதல்‌ வேண்டும்‌.

இதை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும்‌ ஜூலை 30ஆம் தேதி வரை ஹை-டெக் லேப்‌ கணினிகள்‌ பயன்படுத்தி மேற்கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌.

டயட் Faculties என்று அழைக்கப்படும் மாவட்ட முதன்மை பயிற்சியாளர்கள்‌ பள்ளியின்‌ தலைமை ஆசிரியர்களிடம்‌
இச்செயல்பாடு குறித்த தகவல்களை கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்‌’’.

இவ்வாறு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 116 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Micheal Vaughan: ஓய்வு பெற்ற ரோஹித் - கோலி.. ”இவர்களுக்கு மாற்று வீரர்கள் நிச்சயம் இருப்பார்கள்” மைக்கேல் வாகன்
Micheal Vaughan: ஓய்வு பெற்ற ரோஹித் - கோலி.. ”இவர்களுக்கு மாற்று வீரர்கள் நிச்சயம் இருப்பார்கள்” மைக்கேல் வாகன்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
தமிழக சட்டப்பேரவையில் அதிகப்படியான நேரம் ஒதுக்குவது எதிர்க்கட்சிகளுக்கே - சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவையில் அதிகப்படியான நேரம் ஒதுக்குவது எதிர்க்கட்சிகளுக்கே - சபாநாயகர் அப்பாவு
Embed widget