CUET Result 2023: அம்மாடியோவ்... 22 ஆயிரம் பேர் நூற்றுக்கு நூறு- க்யூட் தேர்வு முடிவுகளில் சுவாரசியம்!
இளநிலை கலை, அறிவியல் படிப்புகளுக்கு நடத்தப்படும் க்யூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியான நிலையில், சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் நூற்றுக்கு நூறு பர்செண்டைலைப் பெற்றுள்ளனர்.
இளநிலை கலை, அறிவியல் படிப்புகளுக்கு நடத்தப்படும் க்யூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியான நிலையில், சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் நூற்றுக்கு நூறு பர்செண்டைலைப் பெற்றுள்ளனர்.
க்யூட் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் மே 21 முதல் ஜூலை 5 வரை, 9 கட்டங்களாக இளநிலை கலை, அறிவியல் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தேசியத் தேர்வுகள் முகமை நடத்திய இந்தத் தேர்வை எழுத, சுமார் 14.99 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில், 11, 16,018 மாணவர்கள் தேர்வை எழுதினர்.
1.48 லட்சம் கேள்விகள்
இளநிலைத் தேர்வு 214 பாடங்களுக்கு 841 கேள்வித் தாள்களில் நடத்தப்பட்டது. குறிப்பாக, 534 கேள்வித் தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் 93 கேள்வித் தாள்கள் 11 பிராந்திய மொழிகளிலும் கேட்கப்பட்டன.
இவர்களுக்கான விடைக் குறிப்புகளை ஆட்சேபிக்க ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை தேதி வழங்கப்பட்டது. இதில் 25,782 விடைத்தாள் ஆட்சேபனைகள் பெறப்பட்டன. இதில் 3,886 வெவ்வேறானவை. இந்தத் தகவல்கள் அனைத்தையும் பார்த்து, திருத்தி முடிவுகளை எடுக்கக் கூடுதல் நேரம் தேவைப்பட்டது என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்து இருந்தார்.
100-க்கு நூறு பர்செண்டைல்
இந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் கணக்கியல், உயிரியல், வணிக ஆய்வுகள், பொருளாதாரம், ஆங்கிலம், வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களில், 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 100-க்கு நூறு பர்செண்டைலைப் பெற்றுள்ளனர். 1.48 லட்சம் கேள்விகள் மொத்தம் கேட்கப்பட்டிருந்தன. தேர்வில் கலந்துகொண்ட 250 பல்கலைக்கழகங்களுக்குத் தேர்வு மதிப்பெண்கள் அனுப்பப்பட உள்ளன.
CUET-UG: Subject Wise No of Candidates Securing 100 Percentile Score pic.twitter.com/TUgQSblcMX
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) July 15, 2023
குறிப்பாக ஆங்கில மொழியில், 5685 மாணவர்கள், இந்தி மொழியில் 102 மாணவர்கள், பெங்காலி மொழியில் 18 மாணவர்கள், தமிழ் மொழியில் ஒரு மாணவர் என 22 ஆயிரம் மாணவர்கள் நூற்றுக்கு நூறு பர்செண்டைலைப் பெற்றுள்ளனர். அதேபோல உயிரியல்/ பயோ டெக்னாலஜி/ பயோகெமிஸ்ட்ரி பாடங்களில், 4850 பேர், நூற்றுக்கு நூறு பர்செண்டைலைப் பெற்றுள்ளனர்.
மாணவர்கள் https://cdnasb.samarth.ac.in/site-admin23/pn/Press+Release+for+Declaration+of+NTA+Score++for+CUET+(UG)+-+2023+dated+15+July+2023.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளையும் பிற புள்ளிவிவரங்களையும் அறிந்துகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://cuet.samarth.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.