மேலும் அறிய

CTET 2022: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம்; திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே கடைசி.. விவரம்!

சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் மீது திருத்தங்கள் செய்ய இன்று (டிசம்பர் 3) கடைசி ஆகும். இதை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.  

சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் மீது திருத்தங்கள் செய்ய இன்று (டிசம்பர் 3) கடைசி ஆகும். இதை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.  

அரசு கொண்டு வந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்தது. அந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு 2011-ல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும்.

இதற்கிடையில் அதையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்வு  தாள்‌ 1-ற்கான கணினி வழித்‌ தேர்வு (Computer Based Examination) கடந்த 14.10.2022 முதல்‌ 19.10.2022 வரையிலும்‌ இரு வேளைகளில்‌ நடைபெற்றது. கணினி வழியில் நடைபெற்ற தேர்வை சுமார் 2 லட்சம் பேர் எழுதினர். இவர்களுக்கான விடைக் குறிப்புகள் அக்டோபர் 29ஆம் தேதி வெளியாகின.

டிசம்பரில் 2 ஆவது தாள்

இதற்கிடையே 2-ம் தாள் தேர்வு டிசம்பர் 2022 மற்றும் ஜனவரி 2023-ல் நடைபெற உள்ளது. இதை எழுத 4 லட்சத்து 1,886 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வர்கள் அக்டோபர் 31 முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். நவம்பர் 25ஆம் தேதி கட்டணம் செலுத்தக் கடைசித் தேதியாக இருந்தது. 

தேர்வர்கள் ஏதேனும் ஒரு தாளுக்கு ரூ.1000 தொகையும் இரண்டு தாள்களுக்கும் ரூ.1,200 தொகையும் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தினர். இதுவே எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கும் முறையே ரூ.500 மற்றும் ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. 

தேர்வு தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை முதல் ஷிஃப்ட்டும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை 2ஆவது ஷிஃப்ட்டும் நடைபெறுகிறது. மொத்தம் 2.30 மணி நேரத்துக்கு, 150 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. 

CTET 2022: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம்; திருத்தங்கள் மேற்கொள்ள இன்றே கடைசி.. விவரம்!

ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 20 மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஏற்கெனவே விண்ணப்பித்த தேர்வர்கள் திருத்தங்களை மேற்கொள்ள இன்று (டிசம்பர் 3ஆம் தேதி) கடைசித் தேதி ஆகும். 

திருத்தங்கள் மேற்கொள்வது எப்படி?

தேர்வர்கள் https://examinationservices.nic.in/ctet2022/root/home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFfEytN2I3LFrLvNrMJcZJNmvOmo19UVefJ33W3y6Mh+V என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

அதில் தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண் (Application No), கடவுச் சொல் (Password),  பாதுகாப்புக் குறியீட்டு எண் (Security Pin) ஆகியவற்றை பதிவு செய்யவும். அதன்மூலம் தேர்வர்கள் உள்ளே நுழைந்து திருத்தங்களை மேற்கொள்ளலாம். 

சிடெட் குறித்த முழுமையான விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s3443dec3062d0286986e21dc0631734c9/uploads/2022/10/2022103152.pdf

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget