வரும் 19ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - பள்ளிக்கல்வித்துறை
தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையளங்களில் அறியலாம்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையளங்களில் அறியலாம் என்றும், 22ஆம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பள்ளிகளில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
#BREAKING | தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 19ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகிறது https://t.co/wupaoCQKa2 | #12thResult | #12thExam | #TNSchools | #TNGovt pic.twitter.com/6Ck0DV1hhA
— ABP Nadu (@abpnadu) July 16, 2021
முன்னதாக, கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்கள் அனைத்து மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கடந்த மாதம் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதற்காக கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்தது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக முதல்வருடன் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். பின்னர், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் தயாராக உள்ளன. இந்த முடிவுகளை வெளியிடுவது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அவர் அனுமதி அளித்தவுடன் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்தும் முதல்வரிடம் ஆலோசனை நடத்தினோம். ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனவே, இது குறித்து மேலும் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும்” என்று கூறினார்.
JEE Main 2021 : மே மாத JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வழக்கமாக ஜூன் அல்லது ஜூலை மாதங்களிலும், பொறியியல் கல்லூரிகள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களிலும் தொடங்கப்படுவது வழக்கம். இதனால், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் அவர்களது பள்ளி வருகை, செய்முறை மதிப்பெண், பள்ளிகளின் பருவத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றை கணக்கிட்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IAS Success Story: UPSC தேர்வு தோல்விகளை எதிர்கொள்வது எப்படி? - அபிஜித் யாதவ் சொல்வதை கேளுங்கள்