IAS Success Story: UPSC தேர்வு தோல்விகளை எதிர்கொள்வது எப்படி? - அபிஜித் யாதவ் சொல்வதை கேளுங்கள்
யுபிஎஸ்சி தேர்வில் ஏற்படும் தோல்விகளையும் மன அழுத்தங்களையும் சமாளிப்பது எப்படி? என்று கூறுகிறார், 5 முறை தோல்வி அடைந்து 6ஆவது முறையாக வெற்றி பெற்ற அபிஜித் யாதவ்
சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தனது 6 முயற்சிக்களும் தனது மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதித்தகாக கூறும் அபிஜித் யாதவ், அந்த வலிகளை சமாளித்து கடந்து வந்தது எப்படி என்பதையும் தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
சிவில் சர்வீஸ் தேர்வை நோக்கிய அபிஜித்தின் பயணம் கடந்த 2014ஆம் ஆண்டில் தொடங்கியது. அவரின் முதல் இரண்டு முயற்சிகளிலும் முதன்மை தேர்வில் தோல்வி அடைந்திருந்தார். அடுத்த இரண்டு முயற்சிகளில் முதன்மை தேர்வில் தேர்ச்சி அடைந்திருந்தாலும், மெயின் தேர்வுக்கான தாள்களை அவரால் க்ளியர் செய்ய முடியவில்லை. அதன்பிறகு எடுத்த முயற்சியில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பிறகும் அபிஜித்துக்கு சிவில் சர்வீஸ் சேவைக்கான இடம் கிடைக்கவில்லை.
இந்த தொடர் தோல்விகள் தனது மன நிலையை வெகுவாக பாதித்ததாக கூறும் அபிஜித் யாதவ், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதை விட்டுவிடலாம் என பலதருணங்களில் உணர்ந்ததாக கூறுகிறார். தேர்வு முடிவுகள் வெளியாகும் ஒவ்வொரு காலகட்டமும் அவரை கீழ் இறக்குவதாக தெரிந்தாலும், அதிலிருந்து தான் கற்றுக் கொண்ட பாடங்கள் அதிகம் என்கிறார் அபிஜித் யாதவ்,
I've spent 5 years of my life on the UPSC journey.
— Abhijeet (@abhiwhy) April 2, 2021
These were my results:
• 6 Attempts
• 4 Mains
• 2 Interviews
• 2 Selections (653 in CSE 2017; R-List in CSE 2018)
= A thread on 10 lessons that I learnt in the process =
தனது வெற்றி தொடர்பாக அபிஜித் யாதவ் பதிவிட்டுள்ள ட்விட்டில் கீழ்கண்ட அம்சங்களை பட்டியலிடுகிறார்.
- நீங்கள் தோல்வியடைவீர்கள், பழகிக் கொள்ளுங்கள்.
- உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துங்கள்.
- உங்களை எப்போதும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
- யுபிஎஸ்சி பயணத்தில் நீங்கள் உருவாக்கும் திறன்கள் நீங்கள் எங்கு சென்றாலும் உங்களுக்கு உதவும்.
- சில நேரங்களில், தோல்விக்குப் பிறகு, நீங்கள் மீண்டும் தூக்கி தரையில் அடிக்கப்பட்டது போல் உணரலாம். இந்த உணர்வு ப்ரிளிம்ஸ், மெயின்கள் அல்லது நேர்காணகள் ஆகியவற்றை எதிர்கொண்ட பிறகும் கூட இருக்கலாம்.
- யு.பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராவது என்பது வாழ்க்கையை கையாள்வதற்கான ஒரு மினி பாடமாகும்.
- மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி கவனிப்பதை நிறுத்துங்கள்.
- வாழ்க்கை நியாயமானது அல்ல.
- கொஞ்சம் சுய மரியாதை கொள்ளுங்கள்.
- அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்ப வாழ்வது கடினம். உங்கள் வாழ்க்கையை நீங்கள் சொந்தமாக வாழுங்கள்.
ஓவ்வொரு முயற்சியும் அடுத்தடுத்த தோல்வியும் வாழ்க்கையை பற்றி அதிகம் கற்றுக் கொள்ள வழிவகுத்ததாக கூறும் அபிஜித் யாதவ்,
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும் இட ஒதுக்கீட்டின் கீழான காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் அபிஜித் யாதவ், தற்போது பென்சில் என்ற ஆன்லைன் டிஜிட்டல் கல்வி தளத்தை உருவாக்கம் பணியில் ஈடுபட்டு வருகிறார். பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று கவலைப்படாமல் தொடர்ந்து முயற்சி செய்வதே தான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய வாழ்க்கைப்பாடம் என்கிறார் அபிஜித் யாதவ்