Hindi: தபால் வழியில், ரூ.50-இல் இந்தி மொழி கற்கும் திட்டம்... விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?
மத்திய இந்தி இயக்குநரகம் சார்பில் தபால் வழியில் இந்தி கற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் மத்திய இந்திய இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்குநரகம் சார்பில் இந்தி மொழியை பயிற்றுவிப்பது மற்றும் உலகளவில் இந்தி மொழியை பிரபலபடுத்துவது உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தி மொழியை பயிற்று விக்க இந்த இயக்குநரகம் பல்வேறு படிப்புகளையும் அளித்து வருகிறது.
இந்நிலையில் ‘தபால் வழியில் இந்தி பயில்வோம்’ என்று பெயரில் தபால் வழியில் இந்தி பயில்வதற்கான விண்ணப்பங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்தி சர்டிபிகேட், டிப்ளமோ, அட்வான்ஸ் டிப்ளமோ என்ற மூன்று வகைகளில் உள்ளது.
இந்தி சர்டிபிகேட்:
தங்கள் தாய்மொழி இந்தி அல்லாத 10 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கான கட்டணம் 50 ரூபாய். அதேபோல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 50 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இந்தி டிப்ளமோ:
முதலில் இந்தி சர்டிபிகேட் மூலம் பயின்றவர்கள் இந்த டிப்ளமோ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்திற்கான கட்டணம் 50 ரூபாய். அதேபோல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 50 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும்.
அட்வான்ஸ் டிப்ளமோ:
அட்வான்ஸ் டிப்ளமோ திட்டத்தை பயில நினைப்பவர்கள் 15 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் அவர்கள் இந்தி டிப்ளமோ திட்டம் அல்லது பள்ளியில் இந்தியை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்திற்கான கட்டணம் 200 ரூபாய். அதேபோல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 200 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும்.
இந்த தபால் வழி இந்தி பயிலும் திட்டம் தொடர்பான இதர தகவல்களுக்கு www.chd.education.gov.in என்ற பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்தத் திட்டங்களுக்கான கட்டணத்தை ஆன்லைன் முறையில் அல்லது வங்கி டிராஃப்ட் மூலமும் செலுத்தலாம். வங்கி டிராஃப்ட் ஆக இருந்தால் Govt of India Director, Central Hindi Directorate சார்பில் எடுக்க வேண்டும். இந்த கோர்ஸ் தொடர்பான சந்தேகங்களுக்கு ccchdadmission@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்