மேலும் அறிய

3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!

CBSE Three Language Policy: சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய மாற்றம்: 2026-27 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் 3-வது மொழி கட்டாயம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், தேசிய கல்விக் கொள்கையின்படி பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஒரு மிக முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் மொழி கற்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. எனினும் இந்த நடைமுறை ஒரு வார காலத்துக்குள் அமலாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதிய பாடத்திட்டம்

புதிய பாடத்திட்ட விதிகளின்படி, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்கள் இனி கட்டாயம் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், அந்த மூன்று மொழிகளில் குறைந்தது இரண்டு மொழிகள் கட்டாயம் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மொழிகளாக (Native Indian Languages - தமிழ், இந்தி, மலையாளம், சமஸ்கிருதம் போன்றவை) இருக்க வேண்டும்.

2026- 27ஆம் ஆண்டு 6ஆம் வகுப்புக்குத் தொடங்கும் மும்மொழிக் கொள்கை, ஒவ்வொரு ஆண்டாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும். இவ்வாறாக 2030- 31ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கை விரிவு செய்யப்படும். 

வெளிநாட்டு மொழிகளுக்கும் வாய்ப்பு

மாணவர்கள் விரும்பினால் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற வெளிநாட்டு மொழிகளை ஒரு பாடமாகத் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால், அவை இரண்டு இந்திய மொழிகளுக்குப் பதிலாக அமையக் கூடாது. சுருக்கமாக சொல்லப்போனால், ஒரு மாணவர் ஆங்கிலம் படித்தால், மீதமுள்ள இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.


3 Language Policy: புத்தகமே இல்லை; ஒரே வாரத்தில் மும்மொழி கொள்கை கட்டாயம் அமல்- சுற்றறிக்கையால் அதிர்ச்சி!

கற்பித்தல் முறையில் பெரிய மாற்றம்

தற்போது பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் இரண்டு மொழிகள் மட்டுமே பிரதானமாக கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய உத்தரவு பள்ளிகளின் கற்பித்தல் முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இதற்கான புதிய பாடப்புத்தகங்கள் தயாரிப்பு மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி குறித்த அறிவிப்பு சிபிஎஸ்இ தரப்பில் இன்னும் வெளியாகவில்லை. எனினும் ஒரு வார காலத்துக்குள் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

3ஆம் மொழியை உடனடியாக கற்பிப்பது எப்படி?

பாடப்புத்தகமோ, ஆசிரியர்களோ இல்லாமல் மூன்றாம் மொழியை உடனடியாகக் கற்பிப்பது எப்படி என்று மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!
வெப்ப அலை விடுமுறை ஈடுசெய்ய... புதுச்சேரி பள்ளிகளுக்கு 7 சனிக்கிழமைகள் வேலை நாட்கள்!
ஐஐடியில் 2 முறை தோல்வி.. ரூ.20,000 சம்பளம் டூ துபாயில் இளம் தொழிலதிபர்! செளரவ் உத்வேக கதை!
ஐஐடியில் 2 முறை தோல்வி.. ரூ.20,000 சம்பளம் டூ துபாயில் இளம் தொழிலதிபர்! செளரவ் உத்வேக கதை!
உள்கட்டமைப்பு, சமநிலை இன்னும் பல.. இந்தியாவுக்கே முன்னோடி தமிழ்நாடு: UDISE அறிக்கை
உள்கட்டமைப்பு, சமநிலை இன்னும் பல.. இந்தியாவுக்கே முன்னோடி தமிழ்நாடு: UDISE அறிக்கை
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Chennai Power Cut: சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
சென்னைல ஜூலை 10 (10.07.2026) எக்கச்சக்கமான இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.!
Embed widget