CBSE 10th 12th Result: இன்று வெளியாகும் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்? டிஜி லாக்கரில் அறிவிப்பு!
CBSE Class 10th, 12th Results 2025: 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த போலிச் செய்திகள் வெளியாகின. இதற்கு சிபிஎஸ்இ மறுப்புத் தெரிவித்துக்கொண்டே வந்தது.

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றே (மே 12) வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் டிஜி லாக்கர் செயலியில், விரைவில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் நடைபெற்ற 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகின. எனினும் அதற்கு முன்பாகவே பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கிய, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
42 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வு
ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தத் தேர்வுகளை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தியா மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.
அவ்வப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த போலிச் செய்திகள் வெளியாகின. இதற்கு சிபிஎஸ்இ மறுப்புத் தெரிவித்துக்கொண்டே வந்தது.
டிஜி லாக்கர் செயலியில் அப்டேட்
இந்த நிலையில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இந்த வாரத்தில் வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், மத்திய அரசின் டிஜி லாக்கர் செயலியில், விரைவில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று (மே 12) பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மாணவர்களும் பெற்றோர்களும்
results.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாகக் காணலாம்.
அதேபோல, டிஜி லாக்கர் செயலியில் https://results.digilocker.gov.in/ என்ற முகவரியை க்ளிக் செய்தும் காணலாம்.
மேலும் குறுஞ்செய்தி வாயிலாகவும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காண்பது எப்படி?
- உங்கள் மொபைலில் Messages செயலியைத் திறக்கவும்.
- கீழ்க்கண்ட ஃபார்மேட்டில் டைப் செய்யவும்.
- cbse10/cbse12 <RollNumber> <SchoolCode> <CentreNumber>
- இதை, 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
- உங்களின் தேர்வு முடிவும் மதிப்பெண்களும் SMS வழியாகத் திரையில் தோன்றும்.
கடந்த 2024ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. 16.21 லட்ச மாணவர்கள் தேர்வை எழுதியதில், 87.98 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 2023ஆம் ஆண்டு மே 12-ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.






















