விரைவில் வெளியாகும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி?
சிபிஎஸ்இ இந்த ஆண்டு முதல்முறையாக 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பொதுத்தேர்வை நடத்திய நிலையில் இதன் முடிவுகள் விரைவில் வெளியாகின.

2026ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் நிலையில், சுமார் 6.8 லட்சம் மாணவர்கள் மதிப்பெண்களுக்காகக் காத்திருக்கின்றனர்.
மாணவர்கள் தங்களின் தேர்ச்சியை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இந்த ஆண்டு முதல்முறையாக 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பொதுத்தேர்வை நடத்தியது. மே 15 முதல் மே 21, 2026 வரை நடைபெற்ற இத்தேர்வை சுமார் 6.8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இவர்கள் தற்போது தங்களின் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
முதல் கட்டத் தேர்வின் முடிவுகள் வெளியான அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, ஜூன் நான்காவது வாரத்தில் இந்த இரண்டாம் கட்ட தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஜூன் 21 முதல் ஜூன் 27, 2026-க்குள் முடிவுகள் எந்த நேரத்திலும் வெளியாகலாம். இருப்பினும், முடிவுகள் வெளியாகும் அதிகாரப்பூர்வ தேதி குறித்து சிபிஎஸ்இ இன்னும் உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று சரிபார்க்கலாம்.
முகப்புப் பக்கத்தில் உள்ள ரிசல்ட் லிங்கை க்ளிக் செய்யவும்.
தங்களின் பதிவு எண் (roll number), பள்ளி எண், நுழைவுச்சீட்டு (admit card) எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு சமர்ப்பித்தால் முடிவுகள் திரையில் தோன்றும்.
எதிர்காலத் தேவைக்காக மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
தற்காலிக சான்றிதழ்கள்
இணையத்தில் வெளியாகும் இந்த மதிப்பெண் சான்றிதழ்கள் தற்காலிகமானவை மட்டுமே என சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது. அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் பின்னர் தங்களது பள்ளிகளிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும். இணையதளம் மட்டுமின்றி SMS, IVRS, டிஜிலாக்கர் (DigiLocker) மற்றும் உமாங் (UMANG) செயலி மூலமாகவும் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
93.7 சதவீதம் தேர்ச்சி
முன்னதாக, 10-ஆம் வகுப்பு முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 15, 2026 அன்று வெளியாகின. அந்தத் தேர்விற்கு 24,83,479 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 24,71,777 பேர் தேர்வெழுதினர். இவர்களில் 23,16,008 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 93.70 சதவீதமாக இருந்தது.
மாணவர்களிடையே தேவையற்ற மற்றும் ஆரோக்கியமற்ற போட்டியைத் தவிர்ப்பதற்காக, அதிக மதிப்பெண் எடுத்த டாப்பர்களின் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிடுவதில்லை. மேலும், மாணவர்களுக்கு முதல், இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை என தரம் பிரித்து வழங்கும் நடைமுறையும் பின்பற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























