CBSE Exam Admit Card 2023: சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; டவுன்லோடு செய்வது எப்படி?
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது. இதை டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது. இதை டவுன்லோடு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ அண்மையில் அறிவித்தது. இதன்படி, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 வரை 2 மணி நேரங்களுக்கு நடைபெறுகிறது. சிபிஎஸ்இ பொதுத் தேர்வை 34 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 18 லட்சம் பேர் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவர். 12ஆம் வகுப்பில் இருந்து 16 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.
ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
திறன் அடிப்படையில் தேர்வுகள்
10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வில் கொள்குறி வகை, பதிலை உருவாக்கும் வகை, அசர்ஷன் வகை, ரீசனிங் மற்றும் சம்பவத்துக்கு ஏற்ற முடிவு (objective type, constructing response type, assertion and reasoning and case based format) ஆகிய பல்வேறு வடிவங்களில் கேள்விகள் இருக்கும்.
2022- 23ஆம் கல்வி ஆண்டில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோராயமாக 40 சதவீதக் கேள்விகளும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோராயமாக 30 சதவீதக் கேள்விகளும் திறன் அடிப்படையில் அமைய உள்ளன.
இதன்படி, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகின்றன. மார்ச் 21ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளும் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகின்றன. ஏப்ரல் 5ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொதுத் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகி உள்ளது.
டவுன்லோடு செய்வது எப்படி?
* மாணவர்கள் cbse.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்
* முகப்புப் பக்கத்தில் உள்ள admit card link என்ற பகுதியை க்ளிக் செய்யவும்
* பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்யவும்
* 10, 12ஆம் வகுப்பு ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.
ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்வது குறித்த விவரங்களை முழுமையாக அறிய: https://www.cbse.gov.in/cbsenew/documents//20230207_downloadingof_Admit_Card_class_X_and_XII_2023_07022023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தனித் தேர்வர்களுக்கும் ஹால் டிக்கெட்
தனித் தேர்வர்களுக்கும் சிபிஎஸ்இ ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் https://cbseit.in/cbse/web/regn/pvtadmcard.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்ப எண், வரிசை எண், தேர்வரின் பெயர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து, ஹால்டிக்கெட்டைப் பெறலாம்.