CBSE 10th 12th Result: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; இணையம் இல்லாமலும் காணலாம்- இதோ பிற வழிகள்!
CBSE 10th 12th Result 2025: 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை ஒரே நேரத்தில் எல்லோரும் இணையத்தில் பார்க்கும்போது முடங்கும் என்பதால், பிற வழிகளில் எப்படிப் பார்ப்பது என்று காணலாம்.

CBSE 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளம் முடங்கினால், தேர்வு முடிவுகளை வேறு வழிகளில் எப்படிக் காணலாம் என்று பார்க்கலாம்.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டுக்கான 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தத் தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றது.
இந்த நிலையில் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மாணவர்களும் பெற்றோர்களும் cbseresults.nic.in, results.cbse.nic.in, cbse.gov.in, results.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாகக் காணலாம். எனினும் ஒரே நேரத்தில் எல்லோரும் இணையத்தில் பார்க்கும்போது முடங்கும் என்பதால், பிற வழிகளில் எப்படிப் பார்ப்பது என்று காணலாம்.
டிஜி லாக்கர் செயலி
மாணவர்கள் digilocker.gov.in மற்றும் UMANG செயலி மூலம் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.
டிஜி லாக்கர் செயலியில் பார்க்க கீழ்க்கண்ட ஆவணங்கள் அவசியம்.
- அனுமதி அட்டை எண் (Admit card number)
- ரோல் நம்பர் (Roll number)
- பள்ளி கோடு (School code)
- பிறந்த தேதி (Date of birth)
எப்படி?
- digilocker.gov.in என்ற இணையதளத்தைத் தேர்வு செய்யவும்.
- வகுப்பு 10 அல்லது வகுப்பு 12 என உங்கள் வகுப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் ரோல் எண், பள்ளி குறியீடு மற்றும் உங்கள் பள்ளியால் பகிரப்பட்ட 6 இலக்க PIN-ஐ உள்ளிடவும்.
- "அடுத்து" என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ உள்ளிடவும்.
- சரிபார்த்த பிறகு, உங்கள் DigiLocker கணக்கு செயல்படுத்தப்படும்
- " Go to DigiLocker account" என்பதைக் கிளிக் செய்யவும்
- உங்கள் CBSE தேர்வு முடிவுகள் 2025 ' Documents' பிரிவின் கீழ் இருக்கும்.
- ஏற்கனவே பதிவு செய்திருந்தால், உள்நுழைந்து உங்கள் முடிவுகளை அறியலாம்.
குறுஞ்செய்தி வாயிலாகவும் காணலாம்
மேலும் குறுஞ்செய்தி வாயிலாகவும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காண்பது எப்படி?
- உங்கள் மொபைலில் Messages செயலியைத் திறக்கவும்.
- கீழ்க்கண்ட ஃபார்மேட்டில் டைப் செய்யவும்.
- cbse10/cbse12 <RollNumber> <SchoolCode> <CentreNumber>
- இதை, 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
- உங்களின் தேர்வு முடிவும் மதிப்பெண்களும் SMS வழியாகத் திரையில் தோன்றும்.























