மேலும் அறிய

CBSE Admit Card: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் எப்போது? பெறுவது எப்படி? விவரம்

CBSE 10th 12th Board Exam 2024 Admit Card: மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு, அதில் முதல்வரிடம் கையெழுத்து பெற வேண்டும். கையெழுத்து இடப்படாத ஹால் டிக்கெட்டுக்கு அனுமதி இல்லை.

சி.பி.எஸ்.சி. 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த நிலையில் தேர்வுகளுக்கான ஹால்டிக்கெட் விரைவில் வெளியாக உள்ளன. அதைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். 

10 ,12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை என இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை

  • பிப்ரவரி 15 - தொழில்முனைவோர்
  • பிப்ரவரி 16 -பேங்க்கிங்
  • பிப்ரவரி 19 -இந்தி
  • பிப்ரவரி 22- ஆங்கிலம்
  • பிப்ரவரி 27 -வேதியியல்
  • பிப்ரவரி 29 -புவியியல்
  • மார்ச் 4 -இயற்பியல்
  • மார்ச் 9- கணிதம்
  • மார்ச் 12- உடற்கல்வி
  • மார்ச் 15- உளவியல்
  • மார்ச் 18- பொருளாதாரம்
  • மார்ச் 19 -உயிரியல்
  • மார்ச் 22 -அரசியல் அறிவியல்
  • மார்ச் 23- கணக்கியல்
  • மார்ச் 27 -வணிக ஆய்வுகள்
  • மார்ச் 28 -வரலாறு
  • ஏப்ரல் 2- தகவல் தொழில்நுட்பம்

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது?

  • பிப்ரவரி 15 – ஓவியம் உள்ளிட்ட தேர்வுகள்
  • பிப்ரவரி 19 – சமஸ்கிருதம் உள்ளிட்ட தேர்வுகள்
  • பிப்ரவரி 20- தமிழ் உள்ளிட்ட தேர்வுகள்
  • பிப்ரவரி 21 - இந்தி
  • பிப்ரவரி 26 –ஆங்கிலம்
  • மார்ச் 2 -அறிவியல்
  • மார்ச் 4 – வீட்டு அறிவியல்
  • மார்ச் 7 - சமூக அறிவியல்
  • மார்ச் 11 - கணிதம்
  • மார்ச் 13 - தகவல் தொழில்நுட்பம்

  • CBSE Admit Card: சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் எப்போது? பெறுவது எப்படி? விவரம்

 ஹால் டிக்கெட் எப்போது?

பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் விரைவில் வெளியாக உள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று காணலாம்.

https://www.cbse.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* 2024ஆம் ஆண்டுக்கான 10, 12ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் என்ற தெரிவைத் தேர்வு செய்யவும்.

* பதிவு எண், கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளிட்டு, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

*இதில் பெயர், பதிவு எண், தேர்வு செய்யப்பட்ட பாடங்கள் தேர்வு மையங்கள், தேர்வு code, தேர்வு தேதிகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

கையெழுத்து கட்டாயம்

மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பெற்றுக்கொண்டு, அதில் முதல்வரிடம் கையெழுத்து பெற வேண்டும். கையெழுத்து இடப்படாத ஹால் டிக்கெட்டுக்கு அனுமதி இல்லை. அத்தகைய ஹால் டிக்கெட்டை வைத்திருக்கும் மாணவர்கள், தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கும் தனித் தேர்வர்களுக்கும் ஒரே நேரத்தில் ஹால் டிக்கெட் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்களுக்கு எப்போது?

தமிழக மாநில பாடத்திட்டத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் 1ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26ஆம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.

கூடுதல் விவரங்களை அறிய: https://cbseacademic.nic.in/index.html- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

முழு தகவல்களுக்கு: https://www.cbse.gov.in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Yamaha Flex Fuel Bike: நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
Embed widget