மேலும் அறிய

CAT 2023 Admit Card: எம்பிஏ கேட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?

எம்பிஏ படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியாகி உள்ளது. இதைத் தரவிறக்கம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

எம்பிஏ படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வுக்கான அனுமதிச் சீட்டு வெளியாகி உள்ளது. இதைத் தரவிறக்கம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். 

கேட் நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.எம்.கள் மற்றும் பிசினஸ் பள்ளிகளில் மேலாண்மைப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. குறிப்பாக அகமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, புத்தகயா, கல்கத்தா, இந்தூர், ஜம்மு, காஷிபூர், கோழிக்கோடு, லக்னோ, நாக்பூர், ராய்ப்பூர், ராஞ்சி, ரோஹ்டக், சம்பல்பூர், ஷில்லாங், சிர்மவுர், திருச்சி, உதய்பூர், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் உள்ள ஐஐஎம்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான கேட் தேர்வு நவம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. 

என்ன தகுதி?

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் அல்லது அதற்கு சமமான சி.ஜி.பி.ஏ.வைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மாற்றுத்திறனாளி மாணவர்கள் இட ஒதுக்கீட்டின்கீழ் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 

முன்னதாக முதுகலை மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் கேட் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கியது. விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் செப்டம்பர் 14 ஆக இருந்த நிலையில், செப்டம்பர் 21ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 

கேட் 2023-க்கான அனுமதிச் சீட்டு இன்று வெளியாகி உள்ளது. தேர்வு முடிவுகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

3 கட்டங்களாகத் தேர்வு

பொது நுழைவுத் தேர்வு தேர்வு 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை முதல்கட்டத் தேர்வும் 2ஆவது கட்டத் தேர்வு 12.30 முதல் 2.30 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. 

தேர்வு முறை எப்படி?

3 வகைமைகளில் கேட் தேர்வு நடைபெறுகிறது. வாய்மொழித் திறன் மற்றும் வாசிப்பு புரிதல் (VARC), தரவு விளக்கம் மற்றும் லாஜிக்கல் ரீசனிங் (DILR) மற்றும் அளவு திறன் (QA) ஆகியவற்றில் தேர்வு நடைபெறுகிறது.  

என்னென்ன ஆவணங்கள் கட்டாயம்?

* அனுமதிச் சீட்டு

* செல்லுபடியாகும் புகைப்பட அடையாளச் சான்று

* சுய அறிவிப்பு படிவம்

* PwD சான்றிதழ் (தேவைப்பட்டால்)

CAT தேர்வுக்கூடத்தில் அனுமதிக்கப்பட்ட பிற பொருட்கள்:

* டிசைன்கள் இல்லாத தண்ணீர் பாட்டில் 

* முகக்கவசம்

* கை சுத்திகரிப்பான் (50 மிலி)

தரவிறக்கம் செய்வது எப்படி?

* தேர்வர்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/756/84433/login.html என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

* அதில், யூசர் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிடவும்.

* அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து, பயன்படுத்திக் கொள்ளலாம். 

கூடுதல் விவரங்களுக்கு: https://iimcat.ac.in/

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
மயிலாடுதுறை: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு 'நற்றுணை விருது' வழங்கி கௌரவிப்பு..!
மயிலாடுதுறை: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு 'நற்றுணை விருது' வழங்கி கௌரவிப்பு..!
CAT 2026: ஐஐஎம் இந்தூர் நடத்தும் முதுகலை மேலாண் நுழைவுத்தேர்வு! விண்ணப்பிக்க செப். 15 கடைசி!
CAT 2026: ஐஐஎம் இந்தூர் நடத்தும் முதுகலை மேலாண் நுழைவுத்தேர்வு! விண்ணப்பிக்க செப். 15 கடைசி!
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Chennai Kumbakonam: சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
சென்னை டூ கும்பகோணம் இனி பறக்கலாம்..! விக்கிரவாண்டி - சேத்தியதோப்பு NHAI அப்டேட் - ரூ.2,000 கோடி, 66KM
Modi Wishes Meloni: Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
Friend மெலோனிக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி; பதிலாக வந்த நெகிழ்ச்சிப் பதிவு; என்ன சொன்னாங்க.?
kia Upcoming SUV: 25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Jaishankar Zelensky Meet: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை தொடருமா இந்தியா.? ஜெலென்ஸ்கியிடம் ஜெய்சங்கர் கூறியது என்ன.?
Xi Jinping Heart Attack: சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு 2 முறை மாரடைப்பு.?! வாரிசு அறிவிக்காதது ஏன்.? திபெத்திய தலைவர் திடுக்கிடும் தகவல்
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Embed widget