மேலும் அறிய

Paramedical Admission: மாணவர்களே... நர்சிங், பி.ஃபார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த  பி.எஸ்சி. நர்சிங் , பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளையே (ஜூலை 10) கடைசி ஆகும்.

தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த  பி.எஸ்சி. நர்சிங் , பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளையே (ஜூலை 10) கடைசி ஆகும். மாணவர்கள் www.tnmedicalselection.org  என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

என்னென்ன படிப்புகள்?

துணை மருத்துவப் படிப்புகளில் நர்ஸிங் படிப்பு, பி.எஸ்சி. படிப்புகளில் ரேடியோதெரபி, ரேடியாலஜி, கார்டியாக் டெக்னாலஜி, க்ரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ரெஸ்பிரேட்டரி தெரபி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி உள்ளிட்ட ஏராளமான பிரிவுகள் உள்ளன. அதேபோல ஃபார்மஸி படிப்பும் படிக்கலாம். எக்கோ கார்டியோ கிராபி, கீமோ டயாலிசிஸ் ஆகியவற்றில் டெக்னீஷியன் படிப்பை முடித்தால் முறையே இதய நிபுணர், சிறுநீரக நிபுணர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றலாம்.

மயக்க மருந்தியல், ஆய்வகவியல், தியேட்டர் உதவியாளர், இசிஜி, ரேடியாலஜி, லேபராட்டரி டெக்னாலஜி ஆகியவற்றில் டிப்ளமோ படிப்பும் படிக்கலாம். 

தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில்‌ உள்ள இடங்கள்‌ மற்றும்‌ தமிழ்நாடு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. மருத்துவ பல்கலைக்கழகத்தால்‌ அங்கீகாரம்‌ செய்யப்பட்ட சுயநிதிக் கல்லூரிகளில்‌ உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில்‌ மருத்துவம்‌ சார்ந்த பட்டப் படிப்புகளில்‌ 2023-2024 ஆம்‌ கல்வி ஆண்டில்‌ சேர்வதற்காக விண்ணப்பிக்கலாம்‌.

சேர்க்கை செயல்முறை தொடர்பான தகவல்களை மாணவர்கள்‌ www.tnhealth.tn.gov.in அல்லது www.tnmedicalselection.org இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு... 

இணைய தளத்தினை அணுகமுடியாத விண்ணப்பதாரர்கள்‌ தங்களது பெற்றோர்‌ அல்லது பாதுகாவலருடன்‌ அனைத்து அசல்‌ சான்றிதழ்களையும்‌ எடுத்து கொண்டு அருகிலுள்ள அரசு மருத்துவக்‌ கல்லூரி / தமிழ்நாடு அரசு பல்‌ மருத்துவக்‌ கல்லூரிக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள இணையதள உதவி மையத்தை
அணுகி இணையதள விண்ணப்பத்தினை பதிவேற்றம்‌ செய்யலாம்‌.

விண்ணப்பதாரர்கள்‌ இணைய தளத்திலுள்ள தகவல்‌ தொகுப்பேட்டினை தரவிறக்கம்‌ செய்து, பிரிண்ட் எடுத்து தங்களது பெற்றோர்‌ அல்லது பாதுகாவலருடன்‌ கவனமாகப்‌ படித்து, இணையதள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கட்டாயமாக நிரப்பப்பட வேண்டிய தகவல்களையும்‌ சமர்ப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும். 

இந்த நிலையில் தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த  பி.எஸ்சி., பி.ஃபார்ம், பிஓடி, பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவுக்கு ஜூன் 28 கடைசி தேதியாக இருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. மாணவர்கள் நாளை (ஜூலை 10ஆம் தேதி) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிப்பது எப்படி?

* மாணவர்கள் https://reg23.tnmedicalonline.co.in/pmc//MyCourse.aspx என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

* கூடுதல் விவரங்களுக்கு: https://tnmedicalselection.net/news/18062023212208.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, கையேட்டை பதிவிறக்கம் செய்து வாசிக்க வேண்டும். 

* புதிதாக பதிவு செய்து, லாகின் செய்ய வேண்டும். 

* கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். 

* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும். 

* இணையதள விண்ணப்ப படிவத்தை ஏற்காத நிகழ்வில்‌ மறுபரிசீலனைக்கு எந்த ஒரு கடிதமோ / கோரிக்கையோ ஏற்றுக்‌கொள்ளப்பட மாட்டாது.

* அதேபோல முழுமையாகப்‌ பூர்த்தி செய்யப்படாத இணையதள விண்ணப்பப் படிவமும்‌ ஏற்றுக்கொள்ளப்படாது.

கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில்‌ ஏதேனும்‌ சந்தேகம்‌ ஏற்பட்டால்‌ தொடர்புகொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

1. 044-29862045
2. 044-29862046
3. 044-28363822
4. 044-28364822
5. 044-28365822
6. 044-28366822
7. 044-28367822
8. 044-28361674 

கூடுதல் விவரங்களுக்கு: https://tnmedicalselection.net/news/18062023212208.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்Doctors Issue : ’’போதிய மருத்துவர்கள் இல்ல..பெரிய தலைவலியா இருக்கு’’புலம்பும் அரசு மருத்துவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
Old Pension Scheme: நியாயமா முதல்வரே..! அரசு அதிகாரிகளுக்கு இனி பழைய ஓய்வூதியம் வாய்ப்பே இல்லை - தமிழக அரசு தந்த ஷாக்
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DGE: பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
Thirumavalavan: ட்விஸ்ட்! அதிமுக-வுடன் விசிக கூட்டணியா? திருமாவளவன் பேச்சால் அரசியலில் பரபரப்பு
"நீதி வெல்லட்டும்" கோஷமிட்ட நடிகை கஸ்தூரி.. நீதிமன்றத்தில் பரபரப்பு!
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Karthigai Month 2024: கார்த்திகை தீபம் எப்போது? எந்த நாளில் என்னென்ன விசேஷம்? ஓர் அலசல்
Embed widget